பாலமேடு ஜல்லிக்கட்டு: மாடு பிடி வீரர்களுக்கு இன்று டோக்கன் விநியோகம்

காளைகளை அடக்கும் வீரர்கள் அனைவரும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: January 13, 2019, 9:34 AM IST
பாலமேடு ஜல்லிக்கட்டு:  மாடு பிடி வீரர்களுக்கு இன்று டோக்கன் விநியோகம்
848 மாடுபிடி வீரர்கள் தேர்வு!
Web Desk | news18
Updated: January 13, 2019, 9:34 AM IST
அலங்காநல்லூர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக 1,442 மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு இன்று டோக்கன் வழங்கப்பட உள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிக பிரபலமானவை. வரும் 15 -ம் தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு நடைபெறும் இத்திருவிழாக்களுக்கான பணிகள் களைகட்டி வருகின்றன.

பார்வையாளர் மாடம், வாடிவாசல் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில்,  மாடுபிடி வீரர்களுக்கு நேற்று டோக்கன்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அலங்காநல்லூரில் 848 பேருக்கும், அவனியாபுரத்தில் 594 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் 18 வயதுக்கு மேற்பட்ட, 40 வயதுக்குட்பட்டவர்களின் பெயர், முகவரி, வயது உள்ளிட்ட விவரங்களை நிரப்பி, ஆதார் அட்டை உள்ளிட்ட சான்றுகளுடன் வீரரகள் வரிசையில் காத்திருந்தனர். காவலர்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து அனுப்பிய பின்னர் அவர்களுக்கு மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனை நடத்தி, போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றவர்கள் என முதல்கட்ட சான்றளித்தனர்.

அதனைத் தொடர்ந்து பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு இன்று காலை முதல் டோக்கன் வழங்கப்படவுள்ளது. காளைகளை அடக்கும் வீரர்களின் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, 155 சென்டிமீட்டர் உயரம், உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இருக்கிறதா எனவும், அறுவை சிகிச்சைகள் இன்றி உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சோதனைகள் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... காவலரை தரதரவென இழுத்துச் சென்ற காளை

First published: January 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...