LIVE: சென்னையில் 10ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. மழை  நிலவரம் , பாதிப்புகள், நடவடிக்கைகள் குறித்த செய்திகளை இங்கு அறியலாம். 

 • Trending Desk
 • | November 09, 2021, 09:17 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 8 MONTHS AGO

  AUTO-REFRESH

  10:9 (IST)
  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, நிவாரண உதவிகளை வழங்கினார். தமிழக முதலமைச்சர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை 3வது நாளாக பார்வையிட்டு வருகிறார்.

  9:50 (IST)

  சமைக்க வச்சிருந்த உப்பு மிளகாய் தூள் சாம்பார் தூள் எல்லாமே மழை-ல அடிச்சிட்டு போயிடுச்சு யாரும் ஒரு வேளை சாப்பாடு குடுக்கல... "வடசென்னையின் வடியாத கண்ணீர்" 

  9:40 (IST)

  சென்னையில் ஒரு லட்சம் மின் கம்பங்கள் மற்றும் மின் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின்தடை ஏற்பட்டால் வரக்கூடிய புகார்களை மின்வாரியம் உடனடியாக சரி செய்கிறது என்றும், தமிழகம் முழுவதும் அனைத்து மண்டலங்களிலும் உயர் அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மின் பிரச்னை தொடர்பாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஆயிரத்து 508 புகார்கள் வந்துள்ளதாகவும், அதில் 607 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் செய்திக்குறிப்பு வாயிலாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

  9:37 (IST)

  ஒரே இடத்தில் ஏற்பட்ட காற்று குவிதல் காரணமாக சென்னையில் அதிக கனமழை பெய்ததாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். 

  9:37 (IST)

  சென்னையில் தொடர்ந்து நான்காவது நாளாக விட்டு மழை பெய்து வருகிறது. பல இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  9:37 (IST)

  பேபி அணைக்கு கீழ் உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதி ரத்து : முல்லைப்பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழ் உள்ள பதினைந்து மரங்களை வெட்டுவதற்கு கேரள அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்துவிட்டதாக அம்மாநில வனத்துறை அமைச்சர் சசீந்திரன் தெரிவித்திருக்கிறார். கேரள சட்டப்பேரவையில் பேசிய அவர், தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்பதற்காக கேரளாவின் பாதுகாப்பு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

  9:33 (IST)

  அடுத்த 12 மணி நேரத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம்

  9:33 (IST)

  அடுத்து வரக்கூடிய 5 நாட்களுக்கு தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் நாளை ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கும் 11ம் தேதி மிக கனமழை முதல் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  9:24 (IST)

  கனமழை காரணமாக சென்னையில் அரசுத்துறை அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை.தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.

  9:24 (IST)

  சிவகங்கை, மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

  வானிலை அறிக்கை – தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட இந்தியாவின் முக்கியப் பகுதிகளின் மழை  நிலவரம் (Weather Update in Tamil) குறித்த செய்திகளை இங்கு அறியலாம்.  வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இங்கு அறியலாம். சென்னை வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Centre, Chennai) வழங்கும் வானிலை முன்னறிவிப்பை (Weather Forecast) உடனுக்குடன் இங்கு அறிந்துக் கொள்ளலாம்.