ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழ்நாட்டில் 6-ம் தேதிவரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அலெர்ட்!

தமிழ்நாட்டில் 6-ம் தேதிவரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அலெர்ட்!

மழைக்கு வாய்ப்பு

மழைக்கு வாய்ப்பு

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தமிழகத்தில் 6 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

  ஆந்திர கடலோரப்பகுதிகளின்  மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,

  02.10.2022 மற்றும் 03.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

  04.10.2022 முதல் 06.10.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

  சென்னையை பொறுத்தவரை:

  அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

  கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): தளி (கிருஷ்ணகிரி), ஒகேனக்கல் (தருமபுரி), ஓசூர் (கிருஷ்ணகிரி), ராசிபுரம் (நாமக்கல்), சங்கரிதுர்கம் (சேலம்) தலா 2, சேந்தமங்கலம் (நாமக்கல்), புதுச்சத்திரம் (நாமக்கல்), எடப்பாடி (சேலம்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), செய்யார் (திருவண்ணாமலை), பாரூர் (கிருஷ்ணகிரி), காஞ்சிபுரம், பென்னாகரம் (தருமபுரி), பார்வூட் (நீலகிரி), பந்தலூர் (நீலகிரி) தலா 1.

  மீனவர்களுக்கான எச்சரிக்கை: 02.10.2022 முதல் 05.10.2022 வரை:  ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய  மத்திய மேற்கு வங்கக்கடல்,  தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய  தென் கிழக்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய  தென் தமிழக கடலோரப்பகுதிகளில்  சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

  Read more: நல்லகண்ணுவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. அரசு மருத்துவமனையில் சிகிச்சை!

  மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Chennai Rain, Rain Update, Weather News in Tamil