ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை : 15 மாவட்டங்களுக்கு அலெர்ட்!

தமிழகத்தில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை : 15 மாவட்டங்களுக்கு அலெர்ட்!

மழைக்கு வாய்ப்பு

மழைக்கு வாய்ப்பு

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட 15  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர்   பா. செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

  தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,

  08.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர்  மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

  09.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில்  ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,  மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும்  பெய்யவாய்ப்புள்ளது.

  10.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

  11.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

  12.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

  சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

  இதையும் படிக்க : ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

  கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

  ஆலங்காயம் (திருப்பத்தூர்), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி) தலா 7, வெட்டிகாடு (தஞ்சாவூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) தலா 5, பையூர் AWS (கிருஷ்ணகிரி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி) தலா 4, செங்கம் (திருவண்ணாமலை),  பாரூர்  (கிருஷ்ணகிரி), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), தனியாமங்கலம் (மதுரை) தலா 3, அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), அவலூர்பேட்டை (விழுப்புரம்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), அறந்தாங்கி (புதுக்கோட்டை), மரக்காணம் (விழுப்புரம்), நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), பெருங்களூர் (புதுக்கோட்டை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), கேத்தாண்டப்பட்டி (திருப்பத்தூர்),  பாப்பாரப்பட்டி AGRO (தர்மபுரி) தலா 2, திருப்பத்தூர் (சிவகங்கை), எட்டயபுரம் (தூத்துக்குடி), புதுச்சேரி  தலா 1.

  மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: Weather News in Tamil