Home /News /tamil-nadu /

தொடர் உச்சத்தில் காய்கறிகளின் விலை... இன்றைய காய்கறி விலை நிலவரம்

தொடர் உச்சத்தில் காய்கறிகளின் விலை... இன்றைய காய்கறி விலை நிலவரம்

காய்கறி விலை நிலவரம்

காய்கறி விலை நிலவரம்

Today Vegetable Price | சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி தக்காளிக்கு என்று தனி மைதானம் துவங்கப்பட்டு 7 நாட்கள் ஆனா நிலையில் விலை குறையாததால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

    சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 4 வது நாளாக ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி மொத்த விற்பனை  1 கிலோ 80 க்கும் சிறு மொத்த விற்பனை 90 க்கும் சென்னை மற்றும் அதன்புறநகர் பகுதிகளில் 100 முதல்120 ரூபாய் வரை மாற்றமின்றி விற்பனையாகிறது.

    இன்று மொத்த 43 வாகனத்தில் 650 டன் தக்காளி வந்து சேர்ந்தது. அதேபோல் இதர அத்தியாவசிய காய்கறிகள் மொத்தம் 5000 டன் தேவை உள்ள நிலையில் 1500 டன் இன்று வரத்து குறைந்து 3500 டன் மட்டுமே வந்துள்ள நிலையில் அதன் விலையும் நேற்று விலையில் 60 லிருந்து 80 ரூபாய்க்கு கூடுதலாக இன்று விலை உயர்ந்து விற்பனையாகிறது.

    சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி தக்காளிக்கு என்று தனி மைதானம் துவங்கப்பட்டு 7 நாட்கள் ஆனா நிலையில் விலை குறையாததால் மக்கள் கவலையடைந்துள்ளனர். மேலும் அத்தியாவசிய காய்கறிகளான உஜாலா கத்திரிக்காய் 1 கிலோ 80, நாட்டுத் தக்காளி கிலோ 90 க்கும், வெங்காயம் 36 ,வெண்டைக்காய் 70 க்கும், கேரட் 70 க்கும், அவரைக்காய் 80 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கீரை வகைகள் முற்றிலும் வரத்து குறைவால் ஒரு கட்டு 35 ரூபாய்க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

    Also Read : அதிகாலையிலேயே வேதா இல்லத்தை சுற்றி வளைத்த போலீஸ்...ஜெயலலிதா கைது: 25 ஆண்டுகள்

    சென்னை கோயம்பேடு மார்க்கெட் இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம் ( ரூபாயில் ஒரு கிலோ  விலைபட்டியல்)

    வெங்காயம் 36/30/26
    நவீன் தக்காளி 90/85
    நாட்டு தக்காளி 90/85
    உருளை 26/22/18
    சின்ன வெங்காயம் 60/50/45
    ஊட்டி கேரட் 70/60/55
    பெங்களூர் கேரட் 50
    பீன்ஸ் 70/65/50
    பீட்ரூட். ஊட்டி 55/50
    கர்நாடக பீட்ரூட் 35/25
    சவ் சவ் 25/22
    முள்ளங்கி 45 /40
    முட்டை கோஸ் 40/35
    வெண்டைக்காய் 60/50
    உஜாலா கத்திரிக்காய் 80/70
    வரி கத்திரி 60/55
    காராமணி 65
    பாவக்காய் 50/40
    புடலங்காய் 50/45
    சுரக்காய் 35/30
    சேனைக்கிழங்கி 17/15
    முருங்ககாய் .170/150
    சேம கிழங்கு 25/15
    காலிபிளவர் 38/35
    வெள்ளரிக்காய் 20/18
    பச்சை மிளகாய் 35/30
    பட்டாணி 40/30
    இஞ்சி 45/20
    பூண்டு 150/90/60
    அவரைக்காய் 80/75
    மஞ்சள் பூசணி 15
    வெள்ளை பூசனி.20
    பீர்க்கங்காய் 60/50
    எலுமிச்சை 30
    நூக்கள் 60
    கோவைக்காய் 60/50
    கொத்தவரங்காய் 50
    வாழைக்காய் 6/5
    வாழைதண்டு,மரம் 40
    வாழைப்பூ 15
    பச்சைகுடமிளகாய் 70/60
    வண்ண குடமிளகாய்.250
    கொத்தமல்லி 4
    புதினா 4
    கருவேப்பிலை 40
    அனைத்து கீரை.40/35
    தேங்காய் . 34/35
    Published by:Vijay R
    First published:

    Tags: Koyambedu Market, Vegetable price

    அடுத்த செய்தி