நாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வு : வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை திங்கட்கிழமை உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை உருவாகும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. கடலூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும், காரைக்கால், புதுச்சேரியிலும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விருதுநகர், தேனி, திண்டுக்கல்,
தென்காசி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, அரியலூர், வேலூர்,
சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடக்கம் : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா முதல் நாளிலேயே தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சிகள், குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டத்தை கொண்டுவர வலியுறுத்தியுள்ளன.
சென்னையில் தொடர் மழையால் குடியிருப்புகளை சூழ்ந்த நீர் : சென்னையில் 3-வது நாளாக பெய்த மழையால் குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கே.கே நகரில் ராஜமன்னார் சாலையில் தேங்கிய மழை நீரை ராட்சத மோட்டார் மூலம் ராமசாமி சாலை வழியாக மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றினர். பெரும்பாலான தெருக்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றுவதற்கு இடம் இல்லாததால் வெள்ள நீரை வடியவைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
ஜியோ கட்டணம்: 20% உயர்கிறது : ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்துவதாக ஜியோ அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு வருகின்ற டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. புதிய கட்டண உயர்வின் படி, 75 ரூபாய் ரீசார்ஜ் 91 ரூபாயாகவும், 129 ரூபாய் திட்டம்155 ரூபாயாகவும், 399 ரூபாய் ரீசார்ஜ், 479 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது. ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் 25 சதவீதம் கட்டணம் உயர்த்திய நிலையில், ஜியோ 20 சதவீதம் மட்டுமே உயர்த்தியுள்ளது.
ஒமைக்ரான்- மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை : தென்னாப்ரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார். கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பூசிகள் குறைக்கும் என்பதால், தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தொற்றுப்பரவல் அதிகரிக்காமல் தடுக்க கட்டமைப்பை மேம்படுத்தும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கான்பூர் டெஸ்டில் இந்தியா ஆதிக்கம் : கான்பூரில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இறுதி நாளான இன்று நியூசிலாந்து வெற்றி பெற 280 ரன்கள் தேவை. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சுழலில் நியூசிலாந்தை சுருட்டினால் முதல் டெஸ்டில் வெற்றி பெறும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Headlines, Weather News in Tamil