இன்று சட்டமன்ற தேர்தல் : காலை 7 மணி முதல் வாக்களிக்கலாம்...

இன்று சட்டமன்ற தேர்தல் : காலை 7 மணி முதல் வாக்களிக்கலாம்...

மாதிரி படம்

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிமுதல் வாக்காளர்கள் வாக்களிக்கலாம் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

  • Share this:
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிமுதல் வாக்காளர்கள் வாக்களிக்கலாம் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கின்றன. தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 பேர் ஆண்கள், 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பேர் பெண்கள். 7,192 பேர் 3ஆம் பாலினத்தவர். தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரங்களுடன் விவிபேட் எந்திரம் (அளித்த வாக்கை உறுதி செய்யும் எந்திரம்) பொருத்தப்பட்டுள்ளது. 1 லட்சத்து 29 ஆயிரத்து 165 வாக்களிக்கும் எந்திரங்களும், 91 ஆயிரத்து 180 கட்டுப்பாட்டு எந்திரங்களும், அதே எண்ணிக்கையில் விவிபேட் எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.

88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 4 லட்சத்து 17 ஆயிரத்து 521 தேர்தல் பணியாளர்கள் பணியில் உள்ளனர். வாக்குச்சாவடி பாதுகாப்பிற்காக போலீஸ் மற்றும் போலீஸ் அல்லாத படை வீரர்கள் 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் உள்ளனர். அதில் 23 ஆயிரத்து 200 மத்திய ஆயுதப்படை காவலர்கள், தமிழக காவல்துறையினர் 74 ஆயிரத்து 163 பேரும் அடங்குவர்.

மொத்தமுள்ள வாக்குச் சாவடிகளில் 50 சதவீதம், அதாவது 46 ஆயிரத்து 203 வாக்குச்சாவடிகளில் வெப்-காஸ்டிங் என்ற தொழில்நுட்பம் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு தெரியும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.

10 ஆயிரத்து 813 பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமுள்ள வாக்குச்சாவடிகள் 537. அங்குள்ள வாக்குப்பதிவு நிலவரங்களை தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு, 8,014 தேர்தல் நுண் பார்வையாளர்கள் அளித்துக்கொண்டிருப்பார்கள்.

Must Read :  தமிழகத்தில் ஒரே நாளில் 3,672 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு 9 லட்சத்தைக் கடந்தது

 

மாலை 6 மணிமுதல் 7 மணிவரையில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல உடல் வெப்பத்தில் மாறுபாடு ஏற்பட்டு தொற்றுக்கான சந்தேகம் உள்ளவர்களுக்கும் கடைசி ஒரு மணி நேரத்தில் முழு கவச உடையுடன் வாக்களிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published: