ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்: ’அரோகரா.. ‘ கோஷமிட்டு பக்தர்கள் பரவசம்!

திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்: ’அரோகரா.. ‘ கோஷமிட்டு பக்தர்கள் பரவசம்!

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

சூரசம்ஹாரத்தில் சூரனை வதம் செய்த கடற்கரையில் குவிந்திருந்த பக்தர்கள் வெற்றிவேல், வீரவேல் என முழக்கமிட்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • tuticorin, India

  திருச்செந்தூரில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷம் முழங்க, சக்திவேலால், கந்தசாமி, சூரனை வதம் செய்யும் நிகழ்வு, கோலாகலமாக நடந்தது. இதில்  ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  திருச்செந்தூரில் ஆண்டுதோறும் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

  கடந்த 25-ஆம் தேதி அன்று கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. கந்த சஷ்டி விழாவின் 5-ம் நாளான நேற்று அதிகாலை வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  இதையும் படிங்க... திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்... விண்ணை பிளந்த “அரோகரா” கோஷம்..!

  கந்த சஷ்டி விழாவின் 6ஆம் நாளான இன்று மாலை சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெற்றது. முன்னதாக பிரசித்தி பெற்ற சூரசம்ஹார விழா சூரசம்ஹாரத்தை காண திருச்செந்தூர் கோயிலில் குவிந்து வரும் பக்தர்கள் பக்தர்களின் வசதிக்காக 300க்கும் மேற்பட்ட தற்காலிக பொது கழிவறைகள் அமைப்பு கோயில் வளாகம் முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

  இதையும் படிங்க:  திருச்செந்தூர் சூரசம்ஹாரம் - நேரலை

  இந்த நிலையில் வெகு விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வில் சூரபத்மனை வேலால் முருகப்பெருமான் வதம் செய்தார். யானை, சிங்க முகமாக மாறிய சூரர்களை முருகப்பருமான் வதம் செய்தார். அப்போழுது கடற்கரையில் குவிந்திருந்த பக்தர்கள் வெற்றிவேல், வீரவேல் என பக்தி முழக்கமிட்டனர்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Thiruchendur