• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • Today Tamil Top News : திரையரங்கில் வெளியானது சிம்புவின் மாநாடு

Today Tamil Top News : திரையரங்கில் வெளியானது சிம்புவின் மாநாடு

மாநாடு

மாநாடு

Headlines Today : உள்ளூர் முதல் உலகநடப்புகள் வரை அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

 • Share this:
  மாநாடு ரிலீஸ் : சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர். இதனிடையே அனைத்து சிக்கல்களும் சரியாகி விட்டது. படம் இன்று வெளியாகும். ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையரங்கில் வெளியானது.

  வங்கக்கடலில் இன்னும் சில மணி நேரங்களில் உருவாகிறது புதிய காற்றழுத்தத்தாழ்வு : தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த சிலமணி நேரங்களில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்ததாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில், இலங்கை மற்றும் தென் தமிழ்நாட்டு கடல்பகுதிக்கு நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு : ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சென்னையில் அதிகாலை முதல் மழை : தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக பெய்து வருகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

  மழைவெள்ள பாதி்ப்புக்கு ரூ.4,626 கோடி கோரும் தமிழக அரசு : தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான மத்தியக் குழுவினர், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர். தமிழக வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரணத்துக்காக மத்திய அரசிடம் மொத்தமாக தமிழ்நாடு அரசு 4 ஆயிரத்து 625 கோடி ரூபாய் கேட்டுள்ளது. தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக ஆயிரத்து 70 கோடியும், நிரந்தரமாக சீரமைக்க 3 ஆயிரத்து 554 கோடியும் வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மத்திய குழுவினர் தங்களது அறிக்கையை அளித்த பிறகு, நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை : வட கிழக்கு பருவமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளியின் 140 ரூபாய்க்கு விற்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. இதளனால் நகர்ப்புற நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

  டிசம்பர் 1ம் தேதி அதிமுக செயற்குழு : அதிமுக செயற்குழு கூட்டம் டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக, வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் புதன்கிழமை காலை 10 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

  அடுத்த 3 சீசனில் சிஎஸ்கே அணியில் தோனி : அடுத்த 3 ஐபிஎல் சீசன்களுக்கு சென்னை சூப்பர்கிங்க்ஸ் அணியில் மகேந்திரசிங் தோனி தொடர்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அணியில் தற்போதுள்ள தோனி, ருத்ராஜ் கெய்க்வாட், ரவீந்திரஜடேஜா அணியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 4வது வீரராக இங்கிலாந்து வீரர் மோயின் அலி அல்லது சாம்கரணை தக்கவைப்பது குறித்து அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

  தனியார் பள்ளி ஆசிரியரும் தூக்கிட்டு தற்கொலை : கரூரில் பாலியல் தொல்லையால், தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை விவகாரத்தில், கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபர் இவர்தானா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vijay R
  First published: