Home /News /tamil-nadu /

Today Tamil Top News : வங்கக் கடலில் இன்று உருவாகிறது புதிய புயல்

Today Tamil Top News : வங்கக் கடலில் இன்று உருவாகிறது புதிய புயல்

மழை

மழை

உள்ளூர் முதல் உலகநடப்புகள் வரை அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்

    இன்று உருவாகிறது புதிய புயல் : புதிதாக உருவாக உள்ள இந்த புயலுக்கு 'ஜாவத்' என்று பெயர் சூட்டப்பட உள்ளது. ஜாவத் புயல் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவான புயலாக வடக்கு ஆந்திரா, ஒடிசா இடையே நாளை கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனை அடுத்து நாளை ஒடிசாவிலும், டிசம்பர் 5 ஆம் தேதி மேற்கு வங்காளத்திலும், அசாம், மேகாலயா, அருணாசல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தமிழ்நாட்டில் நாளை முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு : வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் சனிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். வரும் 5ம் தேதி நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி உட்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

    கர்நாடகாவில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் :  ஒமைக்ரான் தொற்று பாதிப்பு விவகாரம் தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாகவும், நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்து வருவதாகவும் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் குறித்து மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி வருவதாக கூறி இருக்கும் அவர், ஒமைக்ரான் தொற்று உறுதியானவர்களின் தொடர்புகளை கண்காணித்து கண்டுபிடிப்பதே தங்களின் கடமை என்றும் மாநிலத்தில் ஏற்கனவே சர்வதேச விமான பயணிகளை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    ஒமைக்ரான் பரவலை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும் : இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். ஓமைக்கரான் அச்சத்தில் உலக நாடுகள் வீழ்ந்துள்ள நிலையில், இந்தியாவில் தீவிரமாக பரவும் முன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, விவாதத்தின் போது பேசிய மக்களவை உறுப்பினர்கள் திருமாவளவன், ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோர் வலியுறுத்தி இருக்கின்றனர்.

    இன்று முதல் வேட்பு மனுத்தாக்கல் : அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் வேட்பு மனு தாக்கல் நாளை மாலை 3 மணிக்கு நிறைவடைகிறது. மனுக்கள் 5-ம் தேதி காலை பரிசீலிக்கப்படும் என்றும் 6-ம் தேதி மாலை 4 மணிவரை மனுவை திரும்ப பெறலாம் என்றும் அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்து : தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த வருடம் 64 சிறப்புப் பேருந்துகளுக்கு உரிமம் பெறப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று முதல்சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதி நவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன.

    பேருந்தை கொளுத்திய பொதுமக்கள் : விழுப்புரத்தில் தனியார் பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய பேருந்தை அடித்து நொறுக்கிய பொதுமக்கள் தீவைத்து கொளுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று பானாம்பட்டு அருகே ஆட்டோ மீது மோதியதில், ஆட்டோ ஓட்டுநர் அர்ஜூனன் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் அர்ஜூனனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நிலர், பேருந்தின் மீது கற்கள் மற்றும் கட்டைகளை கொண்டு தாக்குதல் நடத்தினர்.

    தாமதமாகும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் :
    இந்தியா - தென்னாப்ரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடரை, தாமதமாக தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாதம் தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 டீ ட்வெண்டி போட்டிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், அங்கு ஒமைக்ரான் வகை தொற்று பரவ தொடங்கியிருப்பதால், வீரர்களின் பாதுகாப்பு குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Tamilnadu

    அடுத்த செய்தி