ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜல்லிக்கட்டு நடத்தலாமா? பீட்டா தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

ஜல்லிக்கட்டு நடத்தலாமா? பீட்டா தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

Jallikattu case | தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதாடி ஜல்லிக்கட்டைத் தடையின்றி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | Delhi

  ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை விதிக்க கோரிய வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

  ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி பீட்டா மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

  அத்துடன், இந்தப் போட்டிகளுக்கான சிறப்பு சட்டத்தை ரத்து செய்யவும் கோரிக்கை விடுத்தனர்.

  இந்த வழக்குகளை, உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு கடந்த வாரம் கோரியது.

  ஆனால், தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய வழக்குகளை இன்று விசாரிக்கிறது.

  இதனிடையே இவ்வழக்கில் மனுதாரராக வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஒண்டிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.

  ALSO READ | கேக் தயாரிப்பில் களமிறங்கும் ஆவின் நிர்வாகம்.. 4 வகைகள் ப்ளான்!

  இதையொட்டி, டெல்லி செல்வதற்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஒண்டிராஜ், ஜல்லிக்கட்டை முடக்க பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். எனவே, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதாடி ஜல்லிக்கட்டைத் தடையின்றி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

  இதற்கிடையில், ஜல்லிக்கட்டு விசாரணை தொடர்பாக டெல்லி முகாம் அலுவலகத்தில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகனை, சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு நடத்தினார். அப்போது, மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், முன் வைக்கப்பட வேண்டிய விவாதங்கள் குறித்து கோரிக்கைகளை முன்வைத்தார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Jallikattu, Supreme court