Home /News /tamil-nadu /

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. மற்ற மாவட்டங்களின் வெயில் அளவு?

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. மற்ற மாவட்டங்களின் வெயில் அளவு?

வெயில் அளவு

வெயில் அளவு

Weather Update | தமிழகத்தில் இன்று கரூர், மதுரை மாவட்டங்களில் வெயில் அளவு 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது.

    கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் தற்போதே வெயில் அதிகமாக சுட்டெரித்து வருகிறது. காலை முதலே அதிகப்படியான வெப்பத்தால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்து இருந்தது.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    Also Read : ரஜினி சொன்ன ஒவ்வொரு சொல்லும் எனக்கு ஊக்கத்தை தருகிறது - மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி

    இந்நிலையில் தமிழகத்தில் இன்று கரூர், மதுரை மாவட்டங்களில் வெயில் அளவு 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு அடுத்தப்படியாக திருச்சி, மதுரை, வேலூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் வெயில் அளவு அதிகமாக பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக உதகையில் 49.82 ஃபாரன்ஹீட்  வெப்பம் பதிவாகி உள்ளது.





























































































































































































    நிலையம்

    MAXIMUM TEMP

    (º C)


    NORMAL MAXIMUM TEMP

    (º C)


    MINIMUM

    TEMP

    (º C)
    அதிராமபட்டினம்33.633.427.0
    சென்னை(நுங்கம்பாக்கம்)34.133.628.5
    சென்னை (மீனம்பாக்கம்)35.734.628.0
    கோயம்புத்தூர்36.236.724.0
    குன்னூர்--24.315.0
    கடலூர்35.133.027.1
    தர்மபுரி35.036.623.0
    ஈரோடு37.6--25.5
    கன்னியாகுமரி33.232.726.4
    காரைக்கால்33.332.627.1
    கரூர் பரமத்தி38.537.222.5
    கொடைக்கானல்20.421.412.0
    மதுரைநகரம்38.637.526.4
    மதுரைவிமானநிலையம்37.737.026.1
    நாகப்பட்டினம்34.232.527.4
    நாமக்கல்----24.0
    பாளையங்கோட்டை--36.225.4
    பாம்பன்33.433.628.1
    பரங்கிப்பேட்டை33.2--24.0
    புதுச்சேரி34.832.827.6
    சேலம்36.237.624.2
    தஞ்சாவூர்36.037.127.6
    திருப்பத்தூர்--37.721.8
    திருச்சிராப்பள்ளி37.336.926.5
    திருத்தணி--36.627.0
    தொண்டி35.632.227.0
    தூத்துக்குடி32.032.826.4
    உதகமண்டலம்--23.69.9
    வால்பாறை22.4---15.5
    வேலூர்35.837.225.2

     
    Published by:Vijay R
    First published:

    Tags: Weather News in Tamil

    அடுத்த செய்தி