ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இன்று சூரிய கிரகணம் - தமிழகத்தில் எங்கு , எப்போது தெரியும்? வெறும் கண்களால் பார்க்கலாமா?

இன்று சூரிய கிரகணம் - தமிழகத்தில் எங்கு , எப்போது தெரியும்? வெறும் கண்களால் பார்க்கலாமா?

சூரிய கிரகணம்

சூரிய கிரகணம்

Solar eclipse | சென்னையில் 5.14 மணிக்கு தொடங்கி 5.50 மணிக்கே முடிந்துவிடும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    இன்று சூரிய கிரகணம் நடைபெறவுள்ள நிலையில், இதனை எந்தெந்த பகுதிகளில் இருந்து பார்க்கலாம் என்பதை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

    பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கிறது.

    இன்று மாலை 4 மணிக்கு சூரியகிரகணம் நிகழவுள்ளது. ரஷ்யாவின் தெற்கு பகுதிகள், கஜகிஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியாவின் சில பகுதிகளில் இந்த சூரிய கிரகணத்தை காணலாம். உலக அளவில் சூரிய கிரகணம் 14:19 மணிக்கு தொடங்கி 18:32 மணிக்கு முடியும். ரஷ்ய நாட்டின் மத்திய பகுதிகளில் சூரியனை 80 விழுக்காடு சந்திரன் மறைக்கும்.

    இந்தியாவில் மாலை 5.30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தையும் கண்டுகளிக்க முடியும். அதிக நேரம் இந்தியாவில் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் இந்த சூரிய கிரகணம் தென்படும். அதிகபட்சமாக குஜராத் மாநில துவாரகாவிலும், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் குறைந்தபட்சமாக 12 நிமிடங்களும் இந்த சூரிய கிரகணம் தென்படும்.

    இதையும் படிங்க | சூரிய கிரகணம் 2022 | என்ன செய்யலாம் மற்றும் என்ன செய்யக்கூடாது.!

    மேலும், மும்பை, புனே, தானே, டெல்லி, ஆமதாபாத், சூரத், ஜெய்பூர் இந்தூர், போபால், லூதியானா, ஆக்ரா, சண்டிகர், உஜ்ஜெய்ன், மதுரா, போர்பந்தர், காந்திநகர், சில்வாசா, பனாஜி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக சூரிய கிரகணம் தென்படும்.

    இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பாா்க்கக்கூடாது. தொலைநோக்கி அல்லது படச்சுருள்களைக் கொண்டு பாா்க்கக்கூடாது. சூரிய வெளிச்சத்தைக் குறைக்கும் தன்மையுடைய சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்தும் பாா்க்கலாம்.

    தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஊட்டி மற்றும் ஐதராபாத், விசாகப்பட்டினம், பாட்னா, பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூரு, கான்பூர், லக்னோ, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக சூரிய கிரகணம் தெரியும்.

    சென்னையில் 5.14 மணிக்கு தொடங்கி 5.50 மணிக்கே முடிந்துவிடும், அதிகபட்சம் 8 விழுக்காடு மட்டுமே சூரிய மறைப்பு இருக்கும்.

    தமிழகத்தில் தென்படும் நேரம் :

    இடம்தொடங்கும் நேரம்சூரியன் மறையும் நேரம்உச்சபட்ச கிரகணம்முடியும் நேரம்  மறைப்பு அளவு
    சென்னை5.145.445.505.50 9.7%
    புதுச்சேரி5.17 5.47 5.525.527.8%
    தஞ்சாவூர்  5.21 5.51 5.535.536.2%
    ராமேஸ்வரம்5.28 5.51 5.545.543.9%
    குமரி5.32 5.55 6.006.172.8%
    மதுரை5.24 5.53 5.566.225.2%
    கோவை5.18 5.52 5.596.247.3%
    வேலூர்5.13 5.49 5.506.26 9.9%

    ஆய்ஜோல், திப்ருகர், இம்பால், இடாநகர், கோஹிமா, சில்சார், அந்தமான் மற்றும் நிகாபார் தீவுகளில் இது தென்படாது.  தமிழ்நாட்டில் இதுக்கு முன்னர் ஜூன் 21 -2020ஆம் ஆண்டு சூரிய கிரகணம் நிகழ்ந்தது. மீண்டும் ஆகஸ்ட் 2 2027ஆம் ஆண்டு இதே போன்ற சூரிய கிரகணத்தை காணலாம்.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Eclipse, Solar eclipse