• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம் - அதிகாலையில் இருந்து காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற மக்கள்

சென்னையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம் - அதிகாலையில் இருந்து காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற மக்கள்

சென்னையில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

சென்னையில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

சென்னையில் இதுவரை 26,37,620 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு 1,57,76,860 தடுப்பூசிகள் வந்துள்ளது.

  • Share this:
சென்னையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம் தடுப்பூசி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற மக்கள்

கொரொனா பாதிப்பு படிபடியாக குறைந்த வரும் நிலையில் தமிழகத்தில் தொடர்ச்சியாக தடுப்பூசி தட்டுபாடு நிலவி வருகிறது.  இந்த நிலையில் இன்று சென்னை உட்பட பல மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தப்படவில்லை, குறிப்பாக சென்னை மாநகராட்சி இணையதளத்தில் இன்று சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்படாது என்றும், தடுப்பூசி வந்தால் மட்டுமே தடுப்பூசி செலுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கம்  புலியூர் மேல் நிலை பள்ளியில் உள்ள தடுப்பூசி மையத்தில் காலை 4 மணி முதலே நீண்ட வரிசையில் பொது மக்கள் காத்திருக்கிறார்கள், ஆனால் தடுப்பூசி இன்று போடவில்லை என்ற பெயர் பலகையை 7 மணிக்கு பிறகு வைத்தனர்.  அதுவரையும் காத்திருந்த பொதுமக்கள் தடுப்பூசி இல்லை என்ற பெயர் பலகையை பார்த்தவுடன் தடுப்பூசி மையத்தில் உள்ள அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் பிறகு காவல் துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களின் கூட்டத்தை கலைத்தனர். மேலும், தடுப்பூசியின் எண்ணிக்கையை அதிகரித்து போட வேண்டும் தடுப்பூசி இல்லை என்றால் முன்னதாகவே தெரிவிக்க  வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

சென்னையில் இதுவரை 26,37,620 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு 1,57,76,860 தடுப்பூசிகள் வந்துள்ளதுஅதில் தற்போது வரையும் 1,57,41,118 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.மேலும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நேற்று 66679 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மத்திய அரசிடமிருந்து போதுமான தடுப்பூசிகள் வந்தால் மட்டுமே அடுத்து தடுப்பூசி போடும் பணியானது தொடங்கப்படும்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: