Home /News /tamil-nadu /

Headlines Today | எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கு முதல் அடிப் பெருக்கு வரை.. இன்றைய முக்கிய செய்திகள்

Headlines Today | எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கு முதல் அடிப் பெருக்கு வரை.. இன்றைய முக்கிய செய்திகள்

தலைப்பு செய்திகள்

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் இன்று அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    திரைப்பட தயாரிப்பாளர்களான கலைப்புலி தாணு, எஸ். ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் 2ம் நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஆடிப் பெருக்கையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர். அதிகாலையிலேயே ஏராளமான புதுமணத் தம்பதிகள் தங்களது குடும்பத்தினருடன் வந்து ஆடிப்பெருக்கை கொண்டாடினர். அவர்கள் திருமணத்தன்று சூடிய மாலைகளை ஆற்றில் விட்டுச் சென்றனர். மேலும், பெண்கள் தங்களது தாலிக் கயிற்றை மாற்றிக் கொண்டு மங்கல பொருட்களை வைத்து பூஜை செய்து வழிபட்டனர். இதேபோன்று திருமணமாகாத பெண்களும் காவிரித் தாய்க்கு விளக்கேற்றி வழிபட்டனர்.

    மிக கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, கோவை மாவட்டம், வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கையொட்டி, தருமபுரியில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் இன்று அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் திருச்சி, கரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மின கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த இரண்டு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்டா மாவட்டங்களுக்கு மத்திய நீர் ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கர்நாடகாவில் கனமழை காரணமாக, கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளிலிருந்து நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஒகேனக்கல் அருவிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் குடும்பங்கள் மீதான வரிச்சுமை அதிகரிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விலைவாசி உயர்வு குறித்து மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அவர், பொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி விதிப்பதற்கு எந்தவொரு மாநிலமும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றார்.

    எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

    தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் சேவை தொடங்கியுள்ளது. 80 கிலோ வரையிலான பார்சலை திருச்சி மற்றும் ஓசூரிலிருந்து இருந்து சென்னைக்கு அனுப்ப 210 ரூபாயும், மதுரையில் இருந்து சென்னைக்கு அனுப்ப 300 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு நாளை மறுதினம் முதல் கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.163 கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரம் இடங்களில் சேர 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

    கடும் எதிர்ப்பையும் மீறி, தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி பயணம் மேற்கொண்டுள்ளார். தைவான் பயணத்தின்போது, சீன எல்லை வழியாக செல்லாமல் பிலிப்பைன்ஸ் வான் பகுதி வழியாக நான்சி பெலோசி பயணம் மேற்கொண்டார். பெலோசியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்தில் 20-க்கும் மேற்பட்ட சீன ராணுவ விமானங்கள் பறந்தன. மேலும், தைவானை ஒட்டிய கடல் பகுதியில் இன்று முதல் தீவிர ராணுவப் பயிற்சி மேற்கொள்ளவதற்காக சீன ராணுவம் தனது படைகளை நகர்த்தி வருகிறது.

    மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை சேர்த்திருந்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை சூர்யகுமார் யாதவ் வென்றார்.

    காமன்வெல்த் லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது. இதேபோல, பேட்மிண்டன் கலப்பு அணிக்கான இறுதிப்போட்டியில், மலேஷியாவை இந்தியா எதிர்கொண்டது. இதில், 1-க்கு மூன்று என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கத்தை வென்றது. 5-வது நாள் முடிவில், இந்திய அணி 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 13 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இதன்மூலம், அணிகள் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Headlines, Tamilnadu

    அடுத்த செய்தி