Home /News /tamil-nadu /

Today Headlines in Tamil : காங்கிரஸ் எம்.பிக்கள் ஆலோசனைக்கூட்டம் முதல் பள்ளிகள் விடுமுறை வரை.. இன்றைய முக்கியச் செய்திகள்

Today Headlines in Tamil : காங்கிரஸ் எம்.பிக்கள் ஆலோசனைக்கூட்டம் முதல் பள்ளிகள் விடுமுறை வரை.. இன்றைய முக்கியச் செய்திகள்

தலைப்பு செய்திகள்

தலைப்பு செய்திகள்

Today News: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி மாடியில் இருந்து விழுந்து இறந்த சம்பவம் தொடர்பாக புதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

  நேஷனல் ஹெரால்டு வழக்கில், டெல்லியில் உள்ள யங் இந்தியா அலுவலகத்திற்கு, அமலாக்கத்துறை சீல் வைத்துள்ள நிலையில், இன்று எம்.பிக்கள் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இன்று காலை காங்கிரஸ் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  மிழகத்தில் கனமழை காரணமாக நீலகிரி, கொடைக்கானல், சிறுமலை, பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை காலத்தை 4 ஆண்டுகளாக அதிகரிக்கும் முடிவிற்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், ஊதிய ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுகுறித்து நிதித்துறையிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

  றுமுகசாமி ஆணையத்திற்கு 14-வது முறையாக அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 13-வது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவக் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால், முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மூன்று வாரம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியது. இதனையேற்று ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தமிழக அரசு மேலும் மூன்று வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.

  டவுள் இல்லை என்றவரின் சிலையை உடைக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  ள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி மாடியில் இருந்து விழுந்து இறந்த சம்பவம் தொடர்பாக புதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மாணவி உயிரிழப்பதற்கு முன்பு பள்ளி வகுப்பறையில் அவர் நடந்து செல்லும் வீடியோ முதலில் வெளியானது. அதனைத் தொடர்ந்து மாணவி பள்ளி வளாகத்தில் மாடியில் ஏறிச் செல்லும் வீடியோவும் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது மாணவி இறந்ததற்கு பிறகு கடந்த 13-ஆம் தேதி காலை 5:30 மணி அளவில் பள்ளியின் வாட்ச்மேன் மற்றும் மூன்று பெண்கள் மாணவியை தூக்கிச் செல்லும் காட்சி மற்றும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  பரிமலை அய்யப்பன் கோவிலில் ஆடி மாத நிறைபுத்தரிசி பூஜைக்கான நடை திறக்கப்பட்டது. நிறைபுத்தரிசி பூஜை இன்று காலை தொடங்கியது. இந்த விழாவில் அறுவடை செய்த நெற்கதிர்களை அய்யப்பனுக்கு படைத்து பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும். நாள் முழுவதும் நெய்யபிஷேகம், அஸ்டாபிஷேகம், உஜபூஜை உட்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து இரவு சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும்.

  காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வரக்கூடும் என்பதால் மத்திய நீர் வள ஆணையம் தருமபுரி உள்ளிட்ட காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

  திமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வர உள்ளன

  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்தின் ஆணையை ரத்து செய்த உச்சநீதிமன்றம், வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறையே விசாரிக்க உத்தரவிட்டுள்ளது

  சென்னை மண்ணடியில், 300 ஆண்டுகளுக்கும் பழமையான ஒன்பது சிலைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பிராட்வேயில் உள்ள பமீலா இமானுவேல் என்பவரது இல்லத்தில் சிலை கடத்தல் நடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தட்சிணாமூர்த்தி சிலை உள்ளிட்ட 8 சிலைகள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் சந்தை மதிப்பு பல கோடி ரூபாய் என்றும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Congress, Headlines, Rain, Tamil News

  அடுத்த செய்தி