Home /News /tamil-nadu /

Today Headlines in Tamil :காவிரியில் கரைபுரளும் வெள்ளம் முதல் காமன்வெல்த் போட்டி தங்கம் வரை.. இன்றைய முக்கிய செய்திகள்

Today Headlines in Tamil :காவிரியில் கரைபுரளும் வெள்ளம் முதல் காமன்வெல்த் போட்டி தங்கம் வரை.. இன்றைய முக்கிய செய்திகள்

தலைப்பு செய்திகள்

தலைப்பு செய்திகள்

Today News: தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

  நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிகனமழையும் கோவை, கள்ளக்குறிச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளதால் அணைக்கு வரக்கூடிய நீர் வரத்து, முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் வால்பாறை சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு ஆட்சித் தலைவர் சமீரன் இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.

  போதிய அறிவிப்பு வெளியிடாமல் நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் அளவை அதிகரிக்கக் கூடாது என்று, மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

  மிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

  மைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  கோவில்பட்டி அரசுக் கல்லூரியில் காதல் விவகாரத்தை தட்டிக்கேட்ட பேராசிரியரை, தாக்கிய விவகாரத்தில் மாணவர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  துரையில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் போதை உணர்வளிக்கும் நரம்பியல் மாத்திரைகளை பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்த பிரபல மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. மகராஷ்டிராவில் அகமது நகர் பகுதியில் அர்ஜூன் ரக டாங்கியில் வைத்து இந்த லேசர் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய ஏவுகணை சோதித்துப் பார்க்கப்பட்டது. டாங்கியில் இருந்து சீறிப் பாய்ந்த ஏவுகணை இரு இலக்குகளை அடுத்தடுத்து மிகச்சரியாக தாக்கியது

  த்திய அரசு பல்கலைக்கழக நுழைவு தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது ரத்தாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

  த்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் டெல்லியில் இன்று சந்திக்கவுள்ளார். இன்று பிற்பகல் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் முதல்முறையாக நீளம் தாண்டுதலில் இந்தியா வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது. இதுபோல் பாரா லிப்டிங் பிரிவில் தங்கம் வென்று சுதிர் அசத்தியுள்ளார்,

  ரூர் அருகே மகாலட்சுமி அம்மன் கோயில் திருவிழாவில் 600க்கும் மேற்பட்டோர் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Cauvery River, DMK, Headlines, Tamil News, Weather News in Tamil

  அடுத்த செய்தி