தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு

தேர்தல் ஆணையம்

தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் இன்று மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 • Share this:
  தமிழகம், புதுச்சேரியில் வேட்பு மனுதாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. முதல்நாளில் இருந்தே ஏராளமானோர் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். சனி, ஞாயிறுகளில் வேட்புமனுக்கள் ஏற்கப்படாத நிலையில், 15ம் தேதி முக்கிய அரசியல் பிரபலங்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இம்முறை சட்டமன்றத் தேர்தலில் பல முனை போட்டி நிலவுவதால் வேட்புமனுக்களை தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதுவரை 3 ஆயிரத்து 900க்கும் அதிகமான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

  கொரோனா விதிகளை பின்பற்றி நடக்கும் வேட்புமனுத் தாக்கல் காலை 11 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற வரும் 22ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே வேட்பாளர்களின் இறுதிப்பட்டியில் வெளியிடப்பட உள்ளது.சட்டமன்றத் தேர்தலுடனே காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இன்றே கடைசிநாளாகும்.

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க... Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! (மார்ச் 19, 2021)  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: