அதிமுக விருப்ப மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்; நாளை நேர்காணல்

அஇஅதிமுக அலுவலகம்

திமுக வேட்பாளர் நேர்காணல் நேற்று தொடங்கியது. இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது.

 • Share this:
  சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாளை வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளது.

  தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருப்பதால், அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரம் என பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன.

  அதிமுக கூட்டணியில் இடம்பொற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது. திமுக தரபில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடெபெற்று வருகின்றது.

  Must Read: ‘டிடிவி தினகரன் காமெடி பண்ணிக்கொண்டு இருக்கிறார்’ - அமைச்சர் பாண்டியராஜன்

   

  அந்த வகையில், திமுக வேட்பாளர் நேர்காணல் நேற்று தொடங்கியது. இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது. இந்நிலையில், அதிமுக வேட்பாளர் நேர்காணல் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இம்மாதம் 5 ஆம் தேதிவரை அதிமுக விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றுடன் நிறைவடைவதாக அதிமுக தலைமை கழகம் நேற்று அறிவித்துள்ளது.

  இந்நிலையில், அமமுக விருப்பமனு இன்று முதல் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: