புரட்டாசி மாதத்தின் முதல் நாள் இன்று: கோயில்களில் காலை முதலே வழிபாடுகள் தொடங்கியது..

புரட்டாசி மாதத்தின் முதல் நாள் இன்று என்பதால் காலை முதலே கோயில்களில் வழிபாடுகள் தொடங்கியுள்ளன.

புரட்டாசி மாதத்தின் முதல் நாள் இன்று: கோயில்களில் காலை முதலே வழிபாடுகள் தொடங்கியது..
புரட்டாசி மாதத்தின் முதல் நாள் இன்று என்பதால் காலை முதலே கோயில்களில் வழிபாடுகள் தொடங்கியுள்ளன.
  • News18 Tamil
  • Last Updated: September 17, 2020, 1:03 PM IST
  • Share this:
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் விரதம் இருந்து பக்தர்கள், வழிபாடு நடத்துவர். புரட்டாசி மாதத்தின் முதல் நாள் இன்று தொடங்குவதால், பெருமாள் கோயில்களில் காலை முதலே வழிபாடுகள் தொடங்கியுள்ளன.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில், தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் முகக்கசவம், கிருமிநாசினி, தனிமனித இடைவெளி போன்ற பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன், பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் படிக்க...அரியர் தேர்வு விவகாரம்: ’மாணவர் சமுதாயத்தை ஏமாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை’ - சட்டப்பேரவையில் அமைச்சர் கே.பி.அன்பழகன்..இதனிடையே மகாளய அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்க சில கோவில் படித்துறைகளில் அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரசித்தி பெற்ற திருச்சி அம்மா மண்டபத்திற்கு வருவதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
First published: September 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading