அரபிக்கடலில் இன்று புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அரபிக்கடலில் இன்று புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: June 11, 2019, 8:39 AM IST
  • Share this:
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நெல்லை, கன்னியாகுமாரி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனிடையே, அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக மாற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை:

தென்மேற்குப் பருவமழை, கேரளாவில் தாமதமாக சனிக்கிழமையன்று தொடங்கியது. இதையடுத்து, தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 3-வது நாளாக கனமழை பெய்தது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் தலா ஒன்றரை அடி உயர்ந்துள்ளது.


மீனவர்கள் அச்சம்:

இதனிடையே, கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் நீரோடி, வள்ளவிளை, மார்த்தாண்டம்துறை போன்ற மீனவ கிராமங்களுக்கு கடல்நீர் புகுந்தது. நீரோடி துறையில் மீன்பிடிதளம் இடிந்து வீடுகளில் கடல்நீர் புகுந்ததால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

நெல்லை:நெல்லை மாவட்டம், தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் சீசன் தொடங்கியது. ஐந்தருவியில் நேற்று காலை முதலே தண்ணீர் விழத் தொடங்கியது. இதனால், இரவையும் பொருட்படுத்தாமல், சுற்றுலா பயணிகள், அருவியில் குவிந்து, உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானலில், 3 மணி நேரங்களுக்கு மேலாக நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. சுற்றுலா பயணிகள் மாலை முதல் அறைகளிலேயே முடங்கினர். இந்த நிலையில் அங்குள்ள நட்சத்திர ஏரி நிரம்பியதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

மும்பையிலும் தென்மேற்கு பருவமழை:

தமிழகத்தை தாண்டி மும்பையிலும் தென்மேற்கு பருவமழை, தொடங்கியுள்ளது. விமான நிலையப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. மோசமான வானிலை காரணமாக மும்பையில் தரையிரங்க வேண்டிய விமானங்கள் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

கர்நாடகம்:

கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் கார் மேகங்கள் திரண்டு இருந்ததால் நகரமே, இருண்டிருந்தது. இதை தொடர்ந்து அங்கு சில மணி நேரம் மழை பெய்தது.

அரபிக்கடலில் இன்று புயல் உருவாக வாய்ப்பு:

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாகவும், இது இன்று புயலாக மாறி, குஜராத் நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் கனமழைக்கு எச்சரிக்கை:

வரும் 13 மற்றும் 14-ம் தேதி குஜராத்தில் கன மழைக்கு எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், அங்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், ராணுவம், கப்பற்படை, கடலோர காவல்படைகள் உஷார் நிலையில் இருக்க குஜராத் அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும்:

தமிழகத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், நாட்டிலேயே அதிக பட்சமாக ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் 50.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. இதேபோல், டெல்லியில் வரலாறு காணாத வகையில் பாலம் பகுதியில் 48 டிகிரி செல்சியல் வெப்பம் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Also see... பிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் காலமானார்.

Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading