Home /News /tamil-nadu /

மலைகளின் இளவரசி கொடைக்கானலுக்கு இன்று 177வது பிறந்தநாள்..!

மலைகளின் இளவரசி கொடைக்கானலுக்கு இன்று 177வது பிறந்தநாள்..!

கொடைகானல்

கொடைகானல்

Kodaikanal : வெளி மக்கள் குடியேறிய ஆண்டினை கொடைக்கானல் நகரம் பிறந்த தினமாக கடந்த சில ஆண்டுகளாக நகராட்சியால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கொடைக்கானலுக்கு இன்று 177வது பிறந்தநாள்.

    கொடைக்கானல் என்று அழைக்கப்படும் இந்த அழகிய மலைப்பிரதேசத்தின் பெயர் கொடிக்கானல் என்பதே ஆகும். இன்னும் சொல்லப்போனால் கொடிகளால் சூழப்பட்ட காட்டுப் பகுதி என்பதுதான் இதன் அர்த்தம். கொடி என்றால் காடுகளில் மரங்களையோ அல்லது வேறு ஏதேனும் ஆதாரங்களைப் பற்றி வளரக்கூடிய, ஆங்கிலத்தில் Creepers என்று சொல்லப்படுகிற கொடிகள் என்று பொருள்.

    கானல் என்றால் - காடு என்பது பொருள் (கானகம், வனம்). இதன் காரணம் கொண்டுதான்  இப்பெயர் (கொடிக்கானல்) என அழைக்கப்பட்டது. நாளடைவில் மருவி கொடைக்கானலாக மாறியது. அதிக  பரப்பளவுடன், அடர்த்தியாகவும், ஏராளமான வன விலங்குகளின் வாழ்வாதாரமாகவும், பச்சை வர்ணபட்டுடுத்திய அழகு தேவதையாகவும்  திகழ்ந்து வருகிறது இந்த மலைகளின் இளவரசி.

    அடர்ந்த வனப்பகுதியாக இருந்த கொடைக்கானலில் கடந்த 1845 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் உருவாக்கிய ஓய்வு இல்லத்தில் மே 26 ஆம் தேதி அன்று முதல் முதலாக குடியேறி, மெல்ல மெல்ல நகர் பகுதியாக மாற்றினர், இதனை அடிப்படையாக கொண்டு பழங்குடி மக்களை தவிர்த்து சமவெளிப்பகுதிகளில் இருந்தும், தரைப்பகுதிகளில் இருந்தும் முதலில் வெளிமனிதர்கள் குடியேறிய ஆண்டாக 1845 ஆம் ஆண்டு உள்ளது.

    இவ்வாறு வெளி மக்கள் குடியேறிய ஆண்டினை கொடைக்கானல் நகரம் பிறந்த தினமாக கடந்த சில ஆண்டுகளாக நகராட்சியால் கொண்டாடப்பட்டு வந்தது. இந்த நாளில் பல்வேறு தரப்பு பொதுமக்களுக்கும், வருகைபுரியும் சுற்றுலாப்பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பாக நகராட்சியால் கொண்டாடப்பட்டு வந்தனர். இந்நிலையில், இன்றும் இளமை மாறாமல் உள்ள கொடைக்கானலுக்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் குவிந்து இயற்கை அழகினை கண்டு ரசித்து வருகின்றனர்.

    கொடைக்கானல்


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இன்று மலைகளின் இளவரசி 177வது -பிறந்தநாள் காணுகிறாள், எத்தனை வருடங்கள் கடந்தாலும் தனது இயற்கை அழகை மாறாமல்  இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலாக சுற்றுலா பயணிகளுக்கு காட்சியளிக்கிறாள்.

    கொடைக்கானல்


    Must Read : சதுரகிரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி...

    கொடைக்கானல் பிறந்த தினத்தை சுற்றுலா துறை சார்பில் மிகப்பெரிய அரசு விழாவாக கொண்டாட வேண்டும்  என்பதே பல்வேறு தரப்பு மக்களின் கோரிக்கையாகவும் எழுந்துள்ளது.

    செய்தியாள‌ர்- ஜாப‌ர்சாதிக், கொடைக்கான‌ல்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Dindigul, Kodaikanal

    அடுத்த செய்தி