• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • பகுத்தறிவு பகலவன் பெரியாருக்கு இன்று 142-வது பிறந்தநாள்...

பகுத்தறிவு பகலவன் பெரியாருக்கு இன்று 142-வது பிறந்தநாள்...

தந்தை பெரியார்

தந்தை பெரியார்

"பொதுத் தொண்டுக்கு வந்தவன் மானம், அவமானம் பார்க்க முடியாது, மானம் பார்த்தால் தொண்டு செய்ய முடியாது" காலங்கள் கடந்து நிற்கும் இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் பெரியார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  தொண்டு செய்து பழுத்த பழம் என பாவேந்தர் பாரதிதாசனால் புகழப்பெற்ற பகுத்தறிவு பகலவனுக்கு இன்று பிறந்தநாள்.

  ஈரோட்டில் பெரும் வணிகர் வீட்டு வாரிசாய் பிறந்திருந்தாலும், கோயில் தர்மகர்த்தா முதல் நகராட்சி தலைவர் முதற்கொண்டு பல பதவிகள் தேடி வந்தாலும், எதிலும் ஈடுபாட்டை காட்டியதில்லை பெரியார்.

  ராஜாஜியின் மூலமாக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பெரியார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உயர்ந்ததுடன், கதர் பிரசாரம், கள்ளுக்கடை மறியல் போன்ற காந்திய கொள்கைகளிலும் கவரப்பட்டார்.

  ஆனால், தனது வகுப்புவாரித் தீர்மானத்திற்கு போதிய ஆதரவு கிடைக்காத நிலையில், அங்கிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்.

  தமிழகத்தில் பெயருக்கு பின்னால் சாதி பெயர் போடுவதை பிற்போக்குத்தனமாக பார்க்கும் போக்கிற்கு அடித்தளமிட்டவர் பெரியார். 1929ல் பெரியார் தலைமையில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் பெயருக்கு பின்னால் சாதி பெயரை போடுவதற்கு எதிராக தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.  Also read... முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ப. சிதம்பரம் உள்ளிட்ட 14 எம்.பி.,க்களுக்கு மழைக்கால தொடரிலிருந்து விடுப்பு..

  மூட நம்பிக்கை, சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு என தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் பேசி, கல்லடி, செருப்பு மாலை என பிற்போக்காளர்களால் பல அவமானங்களையும் சந்தித்துள்ளார்.

  அதே சமயம் மாற்று கொள்கைகளை கொண்டவர்களையும் மதிக்கும் பழக்கத்தை கொண்டவர் பெரியார் என்பதற்கு, குன்றக்குடி அடிகளார், மறைமலை அடிகள், ராஜாஜி போன்றவர்கள் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்ததே சான்று.

  பெரியாரின் மற்றொறு முக்கியமான கொள்கை பெண் விடுதலை. பெண்ணுக்கு சுதந்திரம் வேண்டும் என்ற வழக்கமான ஆண்களின் பார்வையில் இல்லாமல், பெண்கள் ஏன் அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகமே அவரது கொள்கை வீரியத்திற்கு சான்றாக இன்றும் விளங்கி வருகிறது.

  மொழி, இனம், மதம் என எதன் மீதும் தனக்கு பற்று இல்லை என கூறிய பெரியார்தான், தமிழகத்தில் நடந்த முதல் இந்தி போராட்டத்தை முன்னின்று நடத்திய தலைவர்களில் ஒருவர்.

  இந்தியை தொடர்ந்து எதிர்த்து வந்த பெரியார், இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை அனைவரும் கற்கவேண்டும் என 1940களிலேயே கோரிக்கை வைத்தவர்.

  அரசியலில் ப.ஜீவானந்தம் முதல் அண்ணா வரை எத்தனையோ பேர் தன்னை விட்டு பிரிந்து போனாலும் தனக்கு சரியென தோன்றுவதை மட்டுமே செய்வேன் என்பதில் பிடிவாதமாக இருந்த பெரியார், காலமெல்லாம் எதிர்த்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பச்சை தமிழரான காமராஜர் ஆட்சியை தொடர்ந்து ஆதரித்தார்.

  பின்பு அண்ணாவுடனான கருத்து வேறுபாடு நீங்கிய பிறகு திமுகவை ஆதரித்த பெரியார், கருணாநிதி ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்து மூடநம்பிக்கைகளை எதிர்த்து பல போராட்டங்களை மேற்கொண்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vinothini Aandisamy
  First published: