தமிழகத்தில் உள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை சூலூர் பகுதியில், திமுக செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இதில் பேசிய துரைமுருகன், ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக, எதிர்ப்பு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய முயற்சித்து வருவதாக விமர்சித்தார். 18 தொகுதிகளில், ஒரு தொகுதி மட்டுமே அதிமுகவுக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் வரும் போது ஆட்சி மாறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும், திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு நீண்ட வரிசையில் நின்று பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த தொகுதிக்குட்பட்ட நொய்யல், திருக்காடுதுரை, புகலூர், தவிட்டுபாளையம், கட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அவர், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சென்ற இடங்களில் எல்லாம் செந்தில் பாலாஜிக்கு பெண்கள் திலகமிட்டு வாழ்த்தினர்.
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக, திமுக கூட்டணி கட்சியினர் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிரிவலப்பாதையில் உள்ள சரவணப்பொய்கை அருகே திமுக தேர்தல் பணிமனையை திமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ. பெரியசாமி மற்றும் ஆர்எஸ் பாரதி ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில் பேசிய அவர்கள், 4 தொகுதிகளிலும் திமுக அமோகமாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
Also see... ஃபோனி புயல்: தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை -வானிலை ஆய்வு மையம்
Phase Four Lok Sabha Election 2019 | மக்களவை தேர்தலுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
Tamil Nadu 10th Result 2019 | 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
Also see... ’70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வோம்’! அமைச்சரின் பதிலால் ஷாக் ஆன செய்தியாளர்கள்
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.