• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பக்ரீத் பண்டியைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

பக்ரீத் பண்டியைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

ஸ்டாலின் - முதல்வர்

ஸ்டாலின் - முதல்வர்

சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க ஈகைத்திருநாளில் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று திருமாவளவன் வாழ்த்து கூறினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஈகைத்திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிட அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின்

தியாகத் திருநாளில் சமுதாய நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு திமுக சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்வதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் .பன்னீர் செல்வம்

அதேபோல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்வதாகவும், அனைவரது வாழ்வில் வளமும், நலமும் பெருகிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வைகோ

புனித தியாகத்திருநாளை பொறுமையோடு கொண்டாடி மகிழுங்கள் எனக்கூறியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இஸ்லாமியர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

கே,எஸ்.அழகிரி

எல்லையில்லா மகிழ்ச்சியுடன் தியாகத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே,எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்

பக்ரீத் திருநாள் சொல்லும் பாடங்களை அனைத்து மக்களும் கடைபிடிக்க வேண்டும் என்றும், நல்ல மனம் கொண்ட மக்களுக்கு எல்லா நலமும், வளமும் கிடைக்க வாழ்த்துக்கள் தெரிவிப்பதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

திருமாவளவன்

பக்ரீத் பண்டிகை தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க இந்த ஈகைத்திருநாளில் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலூம் படிக்க... பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் களைகட்டியது





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: