முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த நாள் இன்று!

பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த நாள் இன்று!

காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசு, அதிமுக, திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

  • Last Updated :

பேரறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் ஊரக தொழில்துறை அமைச்சர் பா பெஞ்சமின், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா மற்றும் அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, அதிமுக சார்பில் அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் திமுக சார்பில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் எம்.எல்.ஏவுமான க.சுந்தர் தலைமையில் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.

எழிலரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் படிக்க...வெங்காய ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை

top videos

    இதே போல் காஞ்சிபுரம் பெரு நகராட்சி, கருக்குப்பேட்டை, அய்யம்பேட்டை பகுதிகளில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு ஏழை எளியோருக்கு இனிப்புகள் வழங்கி  கொண்டாடப்பட்டது.

    First published:

    Tags: Anna birthday, Kancheepuram