கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை

கிறிஸ்துமஸ் அலங்காரம்

கிறிஸ்துமஸை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று (24ஆம் தேதி) வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை.

 • Share this:
  நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று (24ஆம் தேதி) வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  அதன்படி, இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும், இன்றைய விடுமுறைக்கு ஈடாக 2021 பிப்ரவரி 13-ஆம் தேதி, இரண்டாவது சனிக்கிழமை வேலை நாள் என்றும் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.

  கன்னியாகுமரி மக்கள், ஆண்டுதோறும் கிறிஸ்துகஸ் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், அதற்கான முன்னேற்பாடுகளில் உற்சாகமாக ஈடுபட்ட வருகின்றனர். இந்நிலையில், இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் குமரி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
  Published by:Suresh V
  First published: