முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பள்ளி, கல்லூரிகளுக்கு சென்னை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று (நவம்பர் 9) விடுமுறை

பள்ளி, கல்லூரிகளுக்கு சென்னை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று (நவம்பர் 9) விடுமுறை

மழை

மழை

கன மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :

கன மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, மயிலாடுதுறை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருநெல்வேலி, கோவை உட்பட 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகக் கூடும் என்றும், அதையடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்க கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் எனவும்,

தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Must Read :  மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

top videos

    சென்னையை பொறுத்தவரை 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் அவ்வப்போது கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    First published:

    Tags: Rain, School Holiday