தமிழகம் முழுவதும் இறைச்சிக் கடைகளுக்கு இன்று விடுமுறை...

மாதிரிப் படம்

தமிழகம் முழுவதும் இறைச்சி கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டதால் நேற்று மீன் கடைகளில் மக்கள் அதிகளவில் குவிந்தனர். 

 • Share this:
  இன்று திருவள்ளூவர் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் மட்டன், சிக்கன் இறைச்சி கடைகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  இதனையடுத்து மக்கள் சிந்தாதிரிபேட்டை மீன் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் அதிக அளவில் கூட்டமாக மீன், நண்டு, இறால் உள்ளிட்டவைகளை வாங்கி சென்றனர். மீன் கடைகளில் மக்கள் கூட்டத்தையடுத்து ,மீன்களின் விலையும் கிலோவிற்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இதே போல புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள டாஸ்மாக், பார் உள்பட அனைத்து மதுபானக் கடைகளும் மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களும் திருவள்ளுவர் தினத்தையொட்டி இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க...கொரோனா தோன்றல் குறித்து உலகசுகாதார அமைப்பு விசாரணை... சீனா சென்ற 10 பேர் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் குழு  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: