ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு முதல் டிடிஃஎப் வாசனின் எச்சரிக்கை வீடியோ வரை.. இன்றைய (29-09-2022) தலைப்பு செய்திகள்..

அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு முதல் டிடிஃஎப் வாசனின் எச்சரிக்கை வீடியோ வரை.. இன்றைய (29-09-2022) தலைப்பு செய்திகள்..

மாதிரி படம்

மாதிரி படம்

பைக்கில் அதிவேகமாக சென்று சாகசம் புரிந்து தற்போது போலீசாரின் வழக்குப் பதிவுக்கு உள்ளாகியுள்ள  யூ டியூபர் டிடிஎஃப் வாசன், செய்தி ஊடகங்களை எச்சரிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  1. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.  இதனால் ஒரு கோடியே 12 லட்சம் பேர் பயனடைவார்கள்.

  மேலும் படிக்க...

  2. தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு, நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ள மத்திய அரசு, அந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

  மேலும் படிக்க..

  3. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க..

  4. சென்னையில் ஊதிய உயர்வு கோரி நடைபெற்ற அரசு மருத்துவர்களுக்கான போராட்டத்தில் பங்கேற்ற சீமான், அக்டோபர் 2ஆம் தேதி விசிக நடத்தும் மனிதசங்கிலி பேரணியில் பங்கேற்பேன் என தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க..

  5. வேலூரில் பேசிய அமைச்சர் துரைமுருகன் 'மக்களுக்காக இவ்வளவு செய்தும் நீங்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. இருந்தாலும் நான் உங்களுக்கு என் கடமைகளை செய்து வருகிறேன்' என தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க..

  6. ஆம்னி பேருந்துகளில் அதிகப்படியாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், கட்டண குறைப்பு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்தார்.

  மேலும் படிக்க..

  7. சானிட்டரி  நாப்கினை சலுகை விலையில் வழங்க வேண்டும் என பள்ளிச் சிறுமி கோரிக்கை வைத்ததற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியும், பீகார் மாநில குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை செயலருமான ஹர்ஜோத் கவுர் பாம்ரா ‘அரசிடம் இருந்து அடுத்து ஆணுறையை கேட்பீர்கள்.. அப்படித்தானே’ என பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளார்.

  மேலும் படிக்க..

  8. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என  மத்திய அரசின் ஜி.எஸ்.டி. ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

  மேலும் படிக்க..

  9. பைக்கில் அதிவேகமாக சென்று சாகசம் புரிந்து தற்போது போலீசாரின் வழக்குப் பதிவுக்கு உள்ளாகியுள்ள  யூ டியூபர் டிடிஎஃப் வாசன், செய்தி ஊடகங்களை எச்சரிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  மேலும் படிக்க..

  10. நடிகை மீரா மிதுன், இடத்தை அடிக்கடி மாற்றி தலைமறைவாக இருந்து வருவதால், பிடி வரண்ட் பிறப்பிக்க பட்ட அவரை கைது செய்ய முடியாத நிலை உள்ளதாக, காவல் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க..

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Breaking News, Headlines, Tamil News