ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

PFI இயக்கம் தடை முதல் நடிகர் விஷால் வீடு தாக்குதல் வரை.. இன்றைய (28-09-22) தலைப்புச் செய்திகள்

PFI இயக்கம் தடை முதல் நடிகர் விஷால் வீடு தாக்குதல் வரை.. இன்றைய (28-09-22) தலைப்புச் செய்திகள்

மாதிரி படம்

மாதிரி படம்

ஜார்கண்டில் கணவர் கண் முன்னே மனைவியை தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஆறு பேரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  1.  நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சோதனை நடந்த நிலையில் PFI இயக்கத்திற்கு 5 வருடத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட புகாரில் மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை.

  மேலும் இந்த செய்தி தொடர்பான விரிவான தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யவும்..

  2. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த வழக்கின் விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைப்பதில்லை என சிபிசிஐடி காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது.

  மேலும் இந்த செய்தி தொடர்பான விரிவான தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யவும்..

  3. நடிகர் விஷால் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால் சார்பாக அவரது மேலாளர் ஹரி கிருஷ்ணன் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  மேலும் இந்த செய்தி தொடர்பான விரிவான தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யவும்..

  4. உயர் ஜாதி பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டு வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் செப் 13 ஆம் தேதி முதல் 7 நாட்கள் இறுதி விசாரணை நடைபெற்று அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

  மேலும் இந்த செய்தி தொடர்பான விரிவான தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யவும்..

  5. ரூ. 50 லட்சம் திட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

  மேலும் இந்த செய்தி தொடர்பான விரிவான தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யவும்..

  6. நீலகிரி எம்.பி ஆ.ராசா சட்டத்திற்கு புறம்பாகவோ, யாரையும் புண்படுத்தும் விதமாகவோ பேசவில்லை என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.

  மேலும் இந்த செய்தி தொடர்பான விரிவான தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யவும்..

  7. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஜோடி ஆப் மூலம் திருமணம் செய்து ஒரே ஒரு நாள் வாழ்ந்துவிட்டு லாரி டிரைவரை ஏமாற்றி பணம், நகைகளை திருடி சென்ற பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  மேலும் இந்த செய்தி தொடர்பான விரிவான தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யவும்..

  8. ஜார்கண்டில் கணவர் கண் முன்னே மனைவியை தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஆறு பேரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உறவினர்கள், கணவரை தாக்கி விட்டு சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணை தூக்கி சென்று வன்கொடுமை செய்துள்ளனர். இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் 6 பேரை போலீசார் திவீரமாக தேடி வருகின்றனர்.

  மேலும் இந்த செய்தி தொடர்பான விரிவான தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யவும்..

  9. அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் கார்கி கிலிக் , மனிதன் மூலம் இதுவரை செவ்வாய் கிரகத்தில் 7,118.6 கிலோ கழிவு குப்பைகள் சேர்ந்துள்ளதாக ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.

  மேலும் இந்த செய்தி தொடர்பான விரிவான தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யவும்..

  10. தற்போது உள்ள தொழில் நுட்ப வளர்ச்சியில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் இணையத்தில் அந்த விளையாட்டு வந்து கொண்டே தான் இருக்கிறது இதனை முழுவதுமாக தடை செய்வது என்பது இயலாத காரியமாகவே உள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

  மேலும் இந்த செய்தி தொடர்பான விரிவான தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யவும்..

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Headlines, Live, Tamil News