ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கனமழை எதிரொலி : தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

கனமழை எதிரொலி : தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

மாதிரி படம்

மாதிரி படம்

கனமழையின் எதிரொலியால் 3 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    கனமழை காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு  இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    வங்கக் கடல் பகுதியில் காற்றழுத் தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில்,தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை,திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்,திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும் என்றும் கணித்துள்ளது.

    தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் தகவல்

    இந்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகின்றது.  இதையடுத்து தொடர் மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது . தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    Published by:Lakshmanan G
    First published:

    Tags: Rain Update, School Leave