ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

முதலமைச்சர் பேச்சு முதல் ஹெச்.ராஜா விளக்கம் வரை.. இன்றைய (அக்.9) தலைப்புச் செய்திகள்..!

முதலமைச்சர் பேச்சு முதல் ஹெச்.ராஜா விளக்கம் வரை.. இன்றைய (அக்.9) தலைப்புச் செய்திகள்..!

தலைப்புச் செய்திகள்

தலைப்புச் செய்திகள்

’வெறிப்பிடித்து பேசுபவர்களுக்கு உரைக்கதான் அப்படி பதிவிட்டேன்’ என ஹெச்.ராஜா புது விளக்கம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  1. சென்னையில் எப்படிப்பட்ட மழை வந்தாலும் சமாளித்துவிடலாம் என மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பின்  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  2. எடப்பாடி அணியில் இருந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு தாவியுள்ளார். இந்த சம்பவம் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  மேலும் தகவலுக்கு..

  3. சென்னை மயிலாப்பூரில் உள்ள சாலையோர கடைகளில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காய்கறி வாங்கிக்கொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.

  மேலும் தகவலுக்கு..

  4. சர்ச்சையான ட்விட்டர் பதிவு : ’வெறிப்பிடித்து பேசுபவர்களுக்கு உரைக்கதான் அப்படி பதிவிட்டேன்’ என ஹெச்.ராஜா புது விளக்கம்!

  மேலும் தகவலுக்கு..

  5. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திருக்குறளை முழுமையாக படிக்க வலியுறுத்தி கோவை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆளுநருக்கு திருக்குறள் புத்தகங்களை அனுப்பி வைத்தனர்.

  மேலும் தகவலுக்கு..

  6. "ராஜராஜ சோழன் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று விவாதம் எழுந்துள்ள நிலையில், சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றி விட்டோம். ஆனால், இது தமிழ்நாடு அல்ல என்பது என்ன வாதம்? என சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  7. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் இந்தி மொழியைப் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்தியை மட்டும் தேசிய மொழியாக மாற்றுவதாக எந்தவித எண்ணமும் இல்லை என்று தெரிவித்தாக கட்சியில் மூத்த உறுப்பினர் பிரியங்க் கார்கே தகவல் தெரிவித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  8. சென்னை அண்ணாநகர் RTO அலுவலகம் அருகே ஹெல்மெட் அணியாமல் சென்ற காவலர் ஒருவரை ஹெல்மெட் அணிந்து செல்லுமாறு சமூக ஆர்வலர் காசிமாயன் என்பவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர் வாகனத்தை நிறுத்தி காசிமாயனை ஆபசமாக திட்டி மிரட்டும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

  மேலும் தகவலுக்கு..

  9. வருங்கால மருமகனுக்கு 125 வகை உணவு சமைத்துக் கொடுத்து அசத்திய மாமியாரின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

  மேலும் தகவலுக்கு..

  10. தசரா பண்டிகை அன்று சொமோடோவில் பிரியமான உணவை ஆர்டர் செய்து ஒருவர் ஒரு மணி நேரமாகக் காத்துக்கொண்டு இருந்த நிலையில் உணவுடன் வந்த டெலிவரி பாய்க்கு வாசலில் ஆரத்தி எடுத்து பாட்டுப் பாடி வரவேற்ற நிகழ்வு டெல்லியில் நடந்துள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Breaking News, Headlines