ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கனமழை எச்சரிக்கை முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேச்சு வரை.. இன்றைய (அக்.6) தலைப்பு செய்திகள்..

கனமழை எச்சரிக்கை முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேச்சு வரை.. இன்றைய (அக்.6) தலைப்பு செய்திகள்..

மாதிரி படம்

மாதிரி படம்

சென்னை, கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம் உள்ளிட்ட உள்மாவட்டங்களில் வருகிற 9 ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்பு.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  1. தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் 4 நாட்களுக்கு பரவலாக கன மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  2. பூஸ்டர் டோஸ் தமிழ்நாட்டில் ஒவ்வொரு புதன்கிழமையும் இலவசமாக செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  3. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலை துறை சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு கோட்டைக்கு வருவதைவிட கோவிலுக்கு செல்லவது தான் அதிகம். ஒருநாளைக்கு 3 ஊர்களில் இருக்கும் வெவ்வேறு கோவில்களுக்கு சென்று பணியை செய்வார் என தெரிவித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  4. ஆன்மிகத்துக்கு எதிரானதல்ல திமுக என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆன்மிகத்தை அரசியலுக்கும், தங்களுடைய சுயநலனுக்கும் பயன்படுத்துவோருக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  5. தமிழக உரிமைக்காக நாடாளுமன்றத்தில் திமுகவின் குரல் ஒலிக்கிறதா? என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  6. அதிமுகவை ஒன்றிணைக்க பாஜக தலையிட்டால் தவறில்லை எனவும் விரைவில் ஓ.பன்னீர்செல்வம் பிரமதர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை சந்திக்கவுள்ளார் எனவும் ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  7. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லவர் தான் ஆனால் அவர் உடன் இருப்பவர்கள் தான் அவரை தூண்டி விடுகிறார்கள் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  8. வேலூர் பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனுடன் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் துரைமுருகன், மருத்துவரை பார்த்து, “எந்த ஊருமா நீ?, கன்னியாகுமரிக்கு தூக்கி அடிங்க” என அதட்டினார்.

  மேலும் தகவலுக்கு..

  9. ராஜராஜ சோழனை இந்துவாக்க முயற்சிக்கின்றனர் என இயக்குநர் வெற்றிமாறன் பேசியது அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு ஆதரவாக திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  10. அமெரிக்காவைச் சேர்ந்த கரோலின் பெர்ட்டோசி,பேரி ஷார்ப்லெஸ் டென்மார்க்கைச் சேர்ந்த மார்ட்டன் மெல்டல் ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Breaking News, Headlines