முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தங்கமணி குற்றச்சாட்டு முதல் ஆபரேஷன் கஞ்சா வேட்டை வரை.. இன்றைய ( அக்.5) தலைப்பு செய்திகள்..!

தங்கமணி குற்றச்சாட்டு முதல் ஆபரேஷன் கஞ்சா வேட்டை வரை.. இன்றைய ( அக்.5) தலைப்பு செய்திகள்..!

தலைப்பு செய்திகள்

தலைப்பு செய்திகள்

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் “ ஸ்ரீராமாயண யாத்திரை“ க்கான சுற்றுலா திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

1. தமிழகத்தில் H1N1 influenza என்ற பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூடுதல் தகவலுக்கு..

2. பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தில் விருப்பப்படுபவர்கள் வேண்டுமென்றால் பணம் கொடுத்து பயணிக்கலாம் என வெளியான தகவல் போலியானது என போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

கூடுதல் தகவலுக்கு..

3. அதிமுகவில் ஒற்றை தலைமை பேச்சுவார்த்தையின் போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் அடிக்க பாய்ந்ததாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவலுக்கு..

4. மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கூடுதல் தகவலுக்கு..

5. ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் மொத்தமாக தமிழகம் முழுவதும் உள்ள கஞ்சாவை வியாபாரிகளின் 2000 வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளன.

கூடுதல் தகவலுக்கு..

6. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் “ ஸ்ரீராமாயண யாத்திரை“ க்கான சுற்றுலா திட்டத்தைத் தொடங்கியுள்ளது. ராமரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய சில புனித இடங்களை 18 நாட்கள் 17 இரவுகள் கொண்ட ஸ்ரீ ராமாயண யாத்திரை வரும் நவம்பர் 18 ஆம் தேதி தொடங்குகிறது

கூடுதல் தகவலுக்கு..

7. உத்தராகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர். 8 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 23 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர்.

கூடுதல் தகவலுக்கு..

8. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

கூடுதல் தகவலுக்கு..

9. ராஜராஜ சோழனை குறித்த இயக்குநர் வெற்றிமாறன் கருத்திற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

கூடுதல் தகவலுக்கு..

10. கடலூரில் பாம்பு ஒன்று பள்ளி மாணவரின் ஷூக்குள் இருந்தது அவரின் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கூடுதல் தகவலுக்கு..

First published:

Tags: Breaking News, Headlines