ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

முதலமைச்சரின் கடிதம் முதல் நோபல் பரிசு வென்றது யார் வரை..! இன்றைய (அக்.4) தலைப்பு செய்திகள்..!

முதலமைச்சரின் கடிதம் முதல் நோபல் பரிசு வென்றது யார் வரை..! இன்றைய (அக்.4) தலைப்பு செய்திகள்..!

மாதிரி படம்

மாதிரி படம்

கன்னியாகுமரியில் குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்த சக மாணவன். நம்பி குடித்த சிறுவனின் 2 சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | Chennai | Chennai [Madras]

  1. அதிகாரத்தில் உள்ள திமுகவினர் சொல்லிலும் செயலிலும் அலட்சியம் இல்லாமல் கவனமாக செயல்பட வேண்டும் என அக்கட்சியின் தலைவரும்,  முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  2. புதுச்சேரியில் 6 நாட்களாக நடைபெற்ற மின்துறை ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  3. தமிழர்களின் அடையாளங்கள் பறிக்கப்படுவதாக வெற்றிமாறன் பேசியதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் படம் காரணமாக ராஜராஜ சோழன் குறித்து அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பாகவும் சீமான் பரபரப்பான பேட்டியை அளித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  4. கல்வியில் தொடங்கி கலாச்சாரம் வரை அனைத்திலும் இந்தியை திணித்து வரும் மத்திய அரசு, இப்போது வானொலிகள் மூலமாகவும் இந்தியை திணிப்பது நியாயமற்றது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  5. கன்னியாகுமரியில் குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்த சக மாணவன். நம்பி குடித்த சிறுவனின் 2 சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  6. திருச்சியில் தொழில் பார்ட்னர் அழைத்துச் சென்று அடைத்து வைத்து பல கோடிக்கு செக் கையெழுத்து பெற்றுக் கொண்டு தன்னை துன்புறத்துவதாக கதறி அழும் பெண் ஒருவரின் வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.

  மேலும் தகவலுக்கு..

  7. திருத்தணி முருகன் கோவிலில் ரூ.25,150  சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டு இந்து அறநிலைய துறை ஆணையர் உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் பொது வழி மற்றும் 100 ரூபாய் தரிசன வழியில் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

  மேலும் தகவலுக்கு..

  8. ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக தடை செய்தால், அதில் நடிக்க மாட்டேன் என நடிகர் சரத்குமார் பேசியுள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  9. இந்த ஆண்டுகான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்துபோன ஹோமினின்கள் மற்றும் மனித பரிணாமத்தின் மரபணுக்கள் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக அவருக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது.

  மேலும் தகவலுக்கு..

  10. சர்வதேச புகழ்பெற்ற தென்கொரியாவின் பூஸான் சர்வதேச திரைப்பட விழாவில் விக்ரம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Breaking News, Headlines