முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு முதல் இந்திய அணி வெற்றி வரை.. இன்றைய (அக்.3-2022) தலைப்பு செய்திகள் இதோ..!

ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு முதல் இந்திய அணி வெற்றி வரை.. இன்றைய (அக்.3-2022) தலைப்பு செய்திகள் இதோ..!

மாதிரிபடம்

மாதிரிபடம்

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான 2 நாட்களில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

1. காந்தியடிகளை நாம் மறந்து வருகிறோம். காந்தியை நாம் மறவாமல் அவர் நினைவை நாம் தொடர்ந்து போற்றிட வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

மேலும் தகவலுக்கு...

2. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பாஜக அங்கம் வகிக்கும் புதுச்சேரியில் அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் தகவலுக்கு...

3. வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியை (Anti Rabies Vaccine) முற்றிலும் இலவசமாக செலுத்திக்கொள்ளலாம்  என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும் தகவலுக்கு..

4. மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் தரையிலிருந்து 3000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது திடீரென குண்டு ஒன்று விமானத்தைத் துளைத்து இருக்கையில் அமர்ந்திருந்த பயணியின் கழுத்தில் பாய்ந்தது. அதில் அவர் பலத்த காயம் அடைந்த நிலையில் விமானம் லோகாவ்கில் தரையிறக்கப்பட்டு, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் தகவலுக்கு...

5. தூய்மை இந்தியா தரவரிசை பட்டியலில் தமிழகத்தின் பெரிய நகரங்கள் ஒரு சில இடங்கள் மட்டுமே முன்னேறி இருந்தாலும் சிறிய நகரங்கள் அனைத்தும் 200 வது இடத்திற்கு மேல் பிடித்துள்ளது.

மேலும் தகவலுக்கு...

6. புதையல் கிடைக்கும் என்பதற்காக 6 வயது சிறுவனை 2 இளைஞர்கள் நரபலி கொடுத்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தகவலுக்கு...

7. திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனது மகனை பழிவாங்க வேண்டாம் என சவுக்கு சங்கரின் தாயார் கமலா முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் தகவலுக்கு...

8. தமிழக அரசு பேருந்துகளில் வழங்கப்படும் இலவச பயண சலுகையை பெண்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தகவலுக்கு...

9. பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான 2 நாட்களில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துசாதனை படைத்துள்ளது. அடுத்தடுத்த நாட்களிலும் முன்பதிவு அதிகரித்து வருவதால் வசூலில் இந்த திரைப்படம் புதிய உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தகவலுக்கு...

10. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

மேலும் தகவலுக்கு...

First published:

Tags: Breaking News, Headlines, News, Tamil Nadu, Tamil News