ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அண்ணாமலை பாராட்டு முதல் நயன்-விக்கி வாடகை தாய் விவகாரம் வரை.. இன்றைய (அக். 27 2022) தலைப்பு செய்திகள்..

அண்ணாமலை பாராட்டு முதல் நயன்-விக்கி வாடகை தாய் விவகாரம் வரை.. இன்றைய (அக். 27 2022) தலைப்பு செய்திகள்..

மாதிரி படம்

மாதிரி படம்

Headlines | கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்பு செய்திகளாக இங்கு பார்க்கலாம்..

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கோவை, உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற முதலமைச்சர் பரிந்துரைத்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த வழக்கை என்ஐஏக்கு(NIA) மாற்ற பரிந்துரைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

  மேலும் தகவலுக்கு..

  அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பள்ளிகளில்  ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு,  இந்த மாதம் சம்பளம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  புதிய ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துடன் லட்சுமி, விநாயகர் படங்களையும் சேர்க்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இன்று பொறுப்பேற்றார்.

  மேலும் தகவலுக்கு..

  டவ் ஷாம்புகளை பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக வெளியான தகவலையடுத்து, ஷாம்புகளை திரும்ப பெற யூனிலிவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  வாடகை தாய் விவகாரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் விதிகளை மீறவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக  தமிழகத்தை சேர்ந்த சச்சின் சிவா என அழைக்கப்படும் டி. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  உலகின் அழுக்கு மனிதராக கருதப்பட்ட ஈரானைச் சேர்ந்த அமவு ஹாஜி என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மரணமடைந்தார்.

  மேலும் தகவலுக்கு..

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Headlines