ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரிஷி சுனக் தேர்வு முதல் சூரிய கிரகணம் வரை.. இன்றைய (அக். 26 2022) தலைப்பு செய்திகள்...

ரிஷி சுனக் தேர்வு முதல் சூரிய கிரகணம் வரை.. இன்றைய (அக். 26 2022) தலைப்பு செய்திகள்...

மாதிரி படம்

மாதிரி படம்

Headlines | கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்பு செய்திகளாக இங்கு பார்க்கலாம்..

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தேர்வான நிலையில், நேற்று அவரை பிரதமராக நியமித்தார் பிரிட்டன் மன்னர் சார்லெஸ்.

  மேலும் தகவலுக்கு..

  பிரிட்டன் பிரதமராகும் ரிஷி சுனக்கிற்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றார். பிரிட்டன் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே தனது அரசின் இலக்கு என சுனக் தெரிவித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இரு நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக  சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  கோவை உக்கடத்தில் கார் சிலிண்டர் வெடி விபத்து தொடர்பாக 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக நாளை சென்னையில் 80 இடங்களில், போக்குவரத்து போலீசார் சோதனை நடத்தி புதிய அபராத தொகையை விதிக்க முடிவு செய்துள்ளனர்.

  மேலும் தகவலுக்கு..

  சூரிய கிரணகத்தை மிஸ் பண்ணிட்டீங்களா? இதோ நீங்க இருக்கும் இடத்திலிருந்தே பார்க்கலாம்! - சிறப்பு காட்சி

  மேலும் தகவலுக்கு..

  தீபாவளி பண்டிகையையொட்டி தீபாவளியன்று சென்னையில் காற்று மாசுபாடு அபாயகரமான அளவினை எட்டியதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  கவுரி கவுரா பூஜையையொட்டி சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் சாட்டை அடி வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

  மேலும் தகவலுக்கு..

  மகனுக்காக பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேறிய ஜி.பி.முத்துவை பாராட்டி இயக்குனர் சீனு ராமசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு கவனம் ஈர்த்து வருகிறது.

  மேலும் தகவலுக்கு..

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Headlines