ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பிரதமர் மோடி உரை முதல் நாளை பள்ளி விடுமுறை வரை.. இன்றைய ( அக்.24 2022) தலைப்பு செய்திகள்..

பிரதமர் மோடி உரை முதல் நாளை பள்ளி விடுமுறை வரை.. இன்றைய ( அக்.24 2022) தலைப்பு செய்திகள்..

மாதிரி படம்

மாதிரி படம்

Headlines | கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்பு செய்திகளாக இங்கு பார்க்கலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ராமரின் சக்தி இந்தியாவை புதிய உச்சத்திற்கு அழைத்து செல்கிறது என அயோத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

  மேலும் தகவலுக்கு..

  பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக பங்குபெற்றுள்ள வெல்லும் சொல் நிகழ்ச்சி இன்று காலை 10 மணி, இரவு 8 மணி மற்றும் நாளை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

  மேலும் தகவலுக்கு..

  தீபாவளிக்கு அடுத்த நாளான அக்டோபர் 25ஆம் தேதியன்று பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும்  நிலையில் தமிழகம் முழுவதும்  ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் 205 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  தன்னை 5 பேர் கடத்தி 2 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகார் பொய் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  கோவையில் கார் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த நபரின் அடையாளம் தெரிந்த நிலையில், புதிய திருப்பமாக அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  மேலும் தகவலுக்கு..

  சென்னையில் காசி திரையரங்கம் அருகே மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் நடைபெறும் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த செய்தியாளர் முத்துகிருஷ்ணனின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  விஜயின் சர்கார்,  ரஜினியின் தர்பார் உள்ளிட்ட படங்களில் கலை இயக்குனராகப் பணியாற்றிய சந்தானம் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

  மேலும் தகவலுக்கு..

  டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

  மேலும் தகவலுக்கு..

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Breaking News, Headlines