ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையில் 5ஜி சேவை முதல் நியூசிலாந்து வெற்றி வரை.. இன்றைய ( அக்.23 2022) தலைப்பு செய்திகள்..!

சென்னையில் 5ஜி சேவை முதல் நியூசிலாந்து வெற்றி வரை.. இன்றைய ( அக்.23 2022) தலைப்பு செய்திகள்..!

மாதிரி படம்

மாதிரி படம்

Headlines | கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்பு செய்திகளாக இங்கு பார்க்கலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 'ரோஸ்கார் மேளா' எனப்படும் மாபெரும் வேலைவாய்ப்பு திட்டத்தை டெல்லியில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், 75,000 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

  மேலும் தகவலுக்கு..

  மாநில அரசுகள் தொலைக்காட்சி நடத்த அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்து இருப்பதற்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அருணா ஜெகதீசம் ஆணையம் ரஜினி குறித்து கூறிய கருத்து தவறானது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  நடிகை மீரா மிதுனை காணவில்லை என அவரின் தாயார் சியமாளா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்தாலோ, அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டாததால் 10 கோடி தடுப்பூசிகள் வீணாகி அழிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  நாடு முழுவதும் ஜியோவின் 5ஜி சேவைத் தொடங்கப்பட்டு வரும் நிலையில் நேற்று சென்னை உள்பட 2 நகரங்களில் 5 ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் தலைவர் ஆகாஷ் அம்பானி தொடங்கி வைத்தார்

  மேலும் தகவலுக்கு..

  நொய்டாவில்  ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா வைத்து தம்பதிகளின் நெருக்கமான தருணங்களைப் பதிவு செய்து மிரட்டிய நான்கு நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  டி20 உலககோப்பை தொடரின் சூப்பர் 12 முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

  மேலும் தகவலுக்கு..

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Headlines