ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை முதல் சசிகலா கருத்து வரை.. இன்றைய (அக். 19 2022) தலைப்பு செய்திகள்..!

ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை முதல் சசிகலா கருத்து வரை.. இன்றைய (அக். 19 2022) தலைப்பு செய்திகள்..!

மாதிரி படம்

மாதிரி படம்

Headlines | கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்பு செய்திகளாக இங்கு பார்க்கலாம்..

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சட்டபேரவை இன்றும் நாளையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்தி திணிப்பிற்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார். அப்போது அவர், பாஜக அரசு மாநில மொழிகளை வஞ்சிக்கிறது என குற்றம்சாட்டினார்.

  மேலும் தகவலுக்கு..

  தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்து நாளை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி விவகாரம் குறித்து உடனடியாக சபாநாயகர் முடிவை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் தர்ணாவில்  ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் பேரவையிலிருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

  மேலும் தகவலுக்கு..

  ஜெயலலிதா மரணம் தொடர்பாக சட்டப்பேரவையில் 608 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனை குறிப்பிட்டது போல் டிசம்பர் 5ம் தேதி இறக்கவில்லை என்றும் டிசம்பர் 4ம் தேதியே அவர் இறந்துவிட்டதாகவும் ஆறுமுசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அரிசியலாக்குவதை பொதுமக்கள் யாரும் ஏற்கமாட்டார்கள் என வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டை டீவியில் பார்த்து தெரிந்துகொண்டதாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியது உண்மையல்ல என்று அருணா ஜெகதீசன் ஆணையம் தெரிவித்துள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது காவலர் சுடலைக்கண்ணு வேட்டையாடுவது போல் செயல்பட்டார் என அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  தமிழக  அரசின் இருமொழிக் கொள்கையில் ஆங்கிலம் கட்டாயம், தமிழுக்கு அபாயம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சென்னையை சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Headlines