ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் முதல் ஸ்காட்லாந்து வெற்றி வரை. . இன்றைய (அக்.18, 2022) தலைப்பு செய்திகள்...

இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் முதல் ஸ்காட்லாந்து வெற்றி வரை. . இன்றைய (அக்.18, 2022) தலைப்பு செய்திகள்...

மாதிரி படம்

மாதிரி படம்

Headlines | கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்பு செய்திகளாக இங்கு பார்க்கலாம்..

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

  மேலும் தகவலுக்கு..

  தமிழகத்தில் தீண்டாமை கொடுமை இருப்பது வெட்கக்கேடானது என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்ற நிலையில், தமிழ்நாட்டில் 662 வாக்குகள் பதிவாகியுள்ளன.

  மேலும் தகவலுக்கு..

  இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து பேசியதாக திமுக எம்.பி.  ஆ.ராசா மீது நடவடிக்கை எடுப்பதற்கு முகாந்திராம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில்  காவல்துறை தெரிவித்துள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காசிக்கு, பெண்களின் ஆபாச படங்களை பரப்புவதற்கு உதவி செய்த அவரது நண்பர் கவுதமை போலீசார் கைது செய்துள்ளனர்.

  மேலும் தகவலுக்கு..

  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை முடியாமல் சக்கர நாற்காலியில் அமர்ந்து வாக்களிக்க வந்தார்.

  மேலும் தகவலுக்கு..

  இரண்டு ஆண்டுகள் கழித்து கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வரும் நிலையில் மிகவும் வீரியமான ஒமைக்ரான்  BF.7 வகை வைரஸ் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  உக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்ய ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு வயாகரா கொடுக்கப்படுவதாக ஐ.நா. பிரதிநிதி பிரமிளா பேட்டன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  பிரான்சின் தலைநகர் பாரிசில், விலைவாசி உயர்வு மற்றும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அரசாங்கத்திற்கு எதிராக புதிதாக முடிசூட்டப்பட்ட நோபல் இலக்கியப் பரிசு பெற்றவர் உட்பட ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  மேலும் தகவலுக்கு..

  ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 உலககோப்பை போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி படு தோல்வி அடைந்துள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Headlines