ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் முதல் நெதர்லாந்து வெற்றி வரை.. இன்றைய (அக்.17) தலைப்பு செய்திகள்..!

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் முதல் நெதர்லாந்து வெற்றி வரை.. இன்றைய (அக்.17) தலைப்பு செய்திகள்..!

மாதிரி படம்

மாதிரி படம்

கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்பு செய்திகளாக இங்கு பார்க்கலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இந்தியை பயிற்று மொழியாக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பரிந்துரைத்திருந்த நிலையில், இந்தியை திணிக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  மத்திய அரசின் திட்டம் மக்களிடம் சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்ய ஒரு மாதத்திற்குள் 76 மத்திய அமைச்சர்களும்  தமிழ்நாடு வருவார்கள் என அண்ணாமலை பேசியுள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  நாட்டில் முதல் முறையாக மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் மருத்துவ கல்வி பயிலும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் அமித்ஷா, இந்நாள் இந்திய கல்வித்துறைக்கு மிக முக்கியமான நாள் என்று பெருமிதம் தெரிவித்தார்.

  மேலும் தகவலுக்கு..

  சென்னை மற்றும் புறநகர் ரயில்நிலையங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் அது முடிக்கப்படும் என்றும் நியூஸ் 18 செய்தி எதிரொலியாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  தீபாவளி பண்டிகையொட்டி சென்னை தியாகராய நகரில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்திற்குட்பட்ட மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை  மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் போதைப்பொருட்கள் உட்கொள்வதாக யோகா குரு பாபா ராம்தேவ் குற்றச்சாட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை, அமெரிக்க டாலரின் மதிப்புதான் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்ததை அடுத்து அங்கு இரு முக்கிய நகரங்களில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் அதிபர் யோவெரி முசிவேனி முபேந்தே மற்றும் கசன்டா ஆகிய நகரங்களில் மூன்று வாரம் லாக்டவுன் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  உலகின் மிக ஆபத்தான நாடு பாகிஸ்தான்தான் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  டி20 உலககோப்பையின் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமீரகத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வீழ்த்தியது.

  மேலும் தகவலுக்கு..

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Breaking News, Headlines