ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

முதலமைச்சர் வேதனை முதல் நயன்-விக்கி விளக்கம் வரை.. இன்றைய (அக்.16) தலைப்பு செய்திகள்..!

முதலமைச்சர் வேதனை முதல் நயன்-விக்கி விளக்கம் வரை.. இன்றைய (அக்.16) தலைப்பு செய்திகள்..!

மாதிரி படம்

மாதிரி படம்

நடிகை நயன் தாரா- விக்னேஷ் தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுகொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தம்பதியினர் விளக்கமளித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சென்னையில் ரயிலில் தள்ளி கல்லூரி மாணவி கொல்லப்பட்டதை அறிந்து நொறுங்கிப்போனதாக வேதனை தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இனி எந்த பெண்ணுக்கும் இதுபோன்று நடக்காமல் தடுக்கும் கடமை சமூகத்திற்கு உள்ளது என அறிவுறுத்தியுள்ளார்.

  மேலும் தகவலுக்கு...

  தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு,  சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் விழுப்புரம், கடலூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமாரை அங்கீகரிக்காதபட்சத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கலாமா என்பது குறித்து அதிமுக  எம்.எல்.ஏக்களுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  இந்தி மொழியை திணிக்க முயன்றால் டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்துவோம் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  திமுகவின் இந்தி எதிர்ப்பு பிரச்சாரத்தை கண்டித்து, பாஜக சார்பாக விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  பரந்தூர் விமான நிலையம் தொடர்பான அனைத்து போராட்டங்களும் தற்காலிக நிறுத்தி வைப்பதாகவும், தமிழக அரசு விமான நிலையம் அமைப்பது தொடர்பாக ஏதாவது அறிவிப்பு கொடுத்தால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோமென அரசிற்கு போராட்டக்குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  மேலும் தகவலுக்கு..

  அதிமுக ஆட்சியில் ஒரு துளி நீரை கூட சேர்த்து வைக்கவில்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டியுள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை தங்க கவசம் விவகாரத்தில் அதிமுக இரு தரப்பாக உள்ளதால் எந்த தரப்புக்கும் ஆதரவு தரமுடியாது என  தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனா நியூஸ் 18 தமிழ்நாட்டுக்கு பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

  மேலும் தகவலுக்கு..

  வங்கதேசத்தில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில்  இந்திய அணி வெற்றி பெற்று  சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

  மேலும் தகவலுக்கு..

  நடிகை நயன் தாரா- விக்னேஷ் தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுகொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக அவர்கள் அரசிடம் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  மேலும் தகவலுக்கு..

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Breaking News, Headlines