ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் என்ற அன்பில் மகேஷ் அறிவிப்பு முதல் ஆஸ்திரேலிய அணி வெளியேற்றம் வரை.. இன்றைய தலைப்பு செய்திகள்!

இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் என்ற அன்பில் மகேஷ் அறிவிப்பு முதல் ஆஸ்திரேலிய அணி வெளியேற்றம் வரை.. இன்றைய தலைப்பு செய்திகள்!

மாதிரி படம்

மாதிரி படம்

Headlines | கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்பு செய்திகளாக இங்கு பார்க்கலாம்..

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழக ஆளுநர் தனது கருத்தை சொல்ல முழு சுதந்திரம் இருக்கிறது என்றும் திமுகவிற்கு கண்மூடி கையெழுத்து போடும் வேலை தமிழக ஆளுநருக்கு இல்லை என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

  கூடுதல் தகவலுக்கு..

  மழைநாள் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

  கூடுதல் தகவலுக்கு..

  இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தலிலிருந்து தற்போதுவரை தவறாமல் வாக்களித்து மறைந்த ஷியாம் சரண் நேகியின் வீட்டுக்குச் சென்று அவரது படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இரங்கல் தெரிவித்தார்.

  கூடுதல் தகவலுக்கு..

  தமிழகத்தில் பெய்த மழையால் நேற்று ஒரேநாளில் 3 நபர்கள், 25 கால்நடைகள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  கூடுதல் தகவலுக்கு..

  நவம்பர் 9ஆம் தேதிக்கு பிறகுதான் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என ‘தமிழ்நாடு வெதர்மேன்’  என அழைக்கப்படும் பிரபல தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

  கூடுதல் தகவலுக்கு..

  நல்ல சூழ்நிலையில் வளர்ந்த ஆண்கள் இப்படி பேச மாட்டர்கள் என சைதை சாதிக்கு எதிராக டெல்லி தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்த பின் நடிகையும் பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

  கூடுதல் தகவலுக்கு..

  பொள்ளாச்சியில் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி கல்லூரி மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தயாரிப்பாளரை போலீசார் கைது செய்தனர்.

  கூடுதல் தகவலுக்கு..

  கோவையில் ஒரு கிராமம் முழுவதும் ஈக்கள் தொல்லை அதிகரித்திருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

  கூடுதல் தகவலுக்கு..

  பொன்னியின் செல்வன் வெற்றியை எப்படி கொண்டாடுவது என்றே தெரியவில்லை.  அந்த அளவிற்கு சந்தோசமாக இருக்கிறது. இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்துவிட்டு மிக எளிமையாக இருக்கிறார் மணிரத்னம் என ஜெயம் ரவி பேசியுள்ளார்.

  கூடுதல் தகவலுக்கு..

  ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் டி20 உலககோப்பை தொடரில், இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

  கூடுதல் தகவலுக்கு..

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Headlines