Home /News /tamil-nadu /

Headlines Today : இன்று முதல் கத்திரி வெயில்... எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை... - தலைப்புச் செய்திகள் (மே 4-2022)

Headlines Today : இன்று முதல் கத்திரி வெயில்... எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை... - தலைப்புச் செய்திகள் (மே 4-2022)

வெயில் தாக்கம்

Image: Naveen Macro / Shutterstock.com

வெயில் தாக்கம் Image: Naveen Macro / Shutterstock.com

Headlines Today : தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று முதல் தொடங்குகிறது. வரும் 28ம் தேதி வரை இது நீடிக்கும் என்பதால், அடுத்து வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.

  அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று முதல் தொடங்குகிறது. இது வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கும்

  தமிழகத்தில் 8,37,317 மாணவ-மாணவிகள் எழுதும் பிளஸ்-2 பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது.

  அட்சய திருதியை முன்னிட்டு, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

  4 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானியம் கோரிக்கை விவாதம் நடக்கிறது.

  ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு டென்மார்க் சென்றடைந்த பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

  இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று தொடங்குகிறது.

  காவல் நிலையங்களில் இரவு நேரத்தில் கைதிகளிடம் விசாரணை நடத்தக்கூடாது என்று காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

  மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சரக் ஷபத் உறுதி மொழி ஏற்றது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என, மருத்துவத்துறை அமைச்சருக்கு அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

  விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வக்பு வாரிய சொத்துக்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அபகரித்ததாக தமிழக அரசுக்கு முன்னாள் வக்பு வாரியத் தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.

  இந்தி நல்ல மொழி என்றும், அதை அனைவரும் கற்றுக் கொள்வது அவசியம் எனவும் நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார்.

  இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிப்பது தேசத்தில் பிளவை ஏற்படுத்தும் முயற்சி என பாடகர் சோனு நிகம் தெரிவித்துள்ளார்.

  திரைக் கலைஞர்களை வைத்து இந்தி மொழியை வளர்க்கும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டு வருவதாக திரைப்பட இயக்குநர் அமீர் குற்றம்சாட்டியுள்ளார்.

  விசிக பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர் உட்பட 81பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  சென்னையில் போதை மறுவாழ்வு மையத்தில் நபர் ஒருவர், உயிரிழந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

  வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டனாக நிக்கோலஸ் பூரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  Must Read : இலங்கையை வருவாயில் மிகவும் பின்தங்கிய நாடுகளின் பட்டியலில் சேர்க்க இந்தியா முயற்சி - அண்ணாமலை

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வரும் 29ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

  மகளிருக்கான டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடர் புனேவில் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Today news, Top News

  அடுத்த செய்தி