Today Headlines : மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. இன்றைய முக்கியச் செய்திகள் ( ஜூன் 02, 2022)
Today Headlines : மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. இன்றைய முக்கியச் செய்திகள் ( ஜூன் 02, 2022)
முக்கியச் செய்திகள்
ராஜஸ்தானில் 118 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் கொளுத்திய நிலையில் குடிநீர் தட்டுப்பாடும் சேர்ந்து கொண்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த இரு மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.அந்த வகையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98 லிருந்து 139 ஆக அதிகரித்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மீட்கப்பட்ட தமிழக கோயில்களின் பழங்கால சிலைகளை தமிழக அரசிடம் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் ஒப்படைத்தது.
இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் மட்டும்16 லட்சத்து 60 ஆயிரம் வாட்ஸ்ஆப் கணக்குகளை தடை செய்துள்ளதாக அந்நிறுவன செய்தித்தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் மருத்துவமனை வளாகத்தில் அடையாளம் தெரியாத நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தானில் 118 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் கொளுத்திய நிலையில் குடிநீர் தட்டுப்பாடும் சேர்ந்து கொண்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு வெள்ளாற்றில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் சேலம் ஏற்காட்டில் 45-வது கோடை விழா கடந்த 25-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.
ஏற்காடு கோடை விழாவில் சுமார் ஒன்றரை லட்சம் சுற்றுலாப் பயணிகள் மலர் கண்காட்சியை கண்டு ரசித்ததாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வழங்கப்பட்டதால், நலத்திட்டங்களுக்கு பணம் இல்லை. மத்திய அரசு கொடுக்கவில்லை என, இனி தமிழக அரசு கூற முடியாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கின. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.
மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியை தயார்படுத்த இரு மடங்கு வலிமையுடன் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்று அக்கட்சியின் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள பெருமுக்கல் கிராமத்தில் கல் குவாரியில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரில் பட்டா கத்தியுடன் பொதுமக்களை தாக்கிய இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புதிதாக செயலி ஒன்றை தொடங்கியுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.