தஞ்சாவூர் அருகே தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழப்பு.
அரசுப் பள்ளியில் படித்து மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு கையடக்க கணினியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்த நாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவரைப்போல் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி விமர்சித்துள்ளார்.
பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
செங்கம் அரசுப் பள்ளியில் ரேகிங் புகாரில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கோயம்பேடு சந்தையில் ரசாயன கல் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 4 டன் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆம்பூர் அருகே பழுதாகி நின்ற மின்சார பைக்கை ஆத்திரத்தில் அதன் உரிமையாளர் தீ வைத்து எரித்தார்.
நாடு தழுவிய அளவில் இதுவரை இல்லாத வகையில், நேற்று 201 ஜிகாவாட் அளவுக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்சாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று, எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற்றனர்.
பாகிஸ்தானில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 3 சீன நாட்டவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
திரைப்பட நடிகர் ஹிப் பாப் தமிழா ஆதி வீட்டின் மீது கல்வீசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
உக்ரைனில் அணுமின் நிலையங்கள் உள்ள பகுதிகளின் வான்பரப்பு வாயிலாக ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்துவதாக அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
Must Read : அரசுப் பள்ளிகள்தான் நம்முடைய சொத்து- பள்ளி மாணவர்களின் செயல் குறித்து டி.ஜி.பி சைலேந்திர பாபு வேதனை வீடியோ
இலங்கையில் ராஜபக்ச அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி நடத்தும் ஐக்கிய சக்தி பாத யாத்திரை முதலாம் நாளை நிறைவு செய்துள்ளது.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.