Home /News /tamil-nadu /

Headlines Today : நிலக்கரி தட்டுப்பாடு மேட்டூரில் மின்உற்பத்தி பாதிப்பு... ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே தோல்வி... இன்றைய தலைப்புச் செய்திகள் (ஏப்ரல் 26-2022)

Headlines Today : நிலக்கரி தட்டுப்பாடு மேட்டூரில் மின்உற்பத்தி பாதிப்பு... ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே தோல்வி... இன்றைய தலைப்புச் செய்திகள் (ஏப்ரல் 26-2022)

மேட்டூர் அனல் மின் நிலையம்

மேட்டூர் அனல் மின் நிலையம்

Headlines Today : நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 2-வது மற்றும் 3-வது அலகில் மின்உற்பத்தி நிறுத்தம் முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணி வரை இன்றைய முக்கியச் செய்திகள்.

மேலும் படிக்கவும் ...
  நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 2-வது மற்றும் 3-வது அலகில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

  பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்க வகைசெய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.

  ஒடிசா-வில் கடும் வெப்பம் காரணமாக, இன்று முதல் 5 நாட்களுக்கு அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  நாடு முழுவதும் இரண்டாவது கட்ட சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.

  தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் உள்ள 55 நீதிபதிகளை இடமாற்றம் செய்து, உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

  மக்களை விட அதிகாரம் மிக்கவர் என்ற எண்ணம் இருந்தால் அதனை ஆளுநர் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

  தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என பல்கலைக் கழக துணைவேந்தர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கியுள்ளார்.

  சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.

  தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 362ஆக அதிகரித்துள்ளது.

  இந்தியா - ஜப்பான் இடையேயான 70-வது நட்புறவு ஆண்டை ஒட்டி, சென்னை ராணிமேரி கல்லூரியில் தற்காப்புக்கலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

  சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கியவரை பெண் காவலர் ஒருவர் காப்பாற்றிய பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகி இருக்கிறது

  நாமக்கல்லில் நடைபெற்ற திருவிழா தேரோட்டத்தின் போது மின்சாரம் தாக்கியதில் மின் வாரிய ஊழியர் ஒருவர் படுகாயமடைந்தார்.

  மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் மணமக்களுக்கு பெட்ரோலை நண்பர்கள் பரிசாக வழங்கிய சம்பவம், அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

  நீலகிரி மாவட்டத்தில் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் மே 15-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனை, அடுத்த மாதம் 4-ம் தேதி தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

  Read More : நிலக்கரி பற்றாக்குறை... 12 மாநிலங்களில் பல மணி நேரம் மின்வெட்டு - இருளில் மூழ்குமா இந்தியா?

  டெல்லியில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொண்டிருந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளிகள் உயிரிழந்தனர்.

  டெல்லியில் மாநில முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாடு, வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது.

  Must Read : மூதாட்டி கொலை வழக்கில் போலீசுக்கு தண்ணீ காட்டிய நபர்.. ஜாமீன் கிடைத்தும் சிறைவாசம்.. கைது செய்த போலீஸ்

  சமூக வலைதளத்தில் ஆபாச வீடியோக்களை மர்மநபர்கள் அனுப்புவதாக நடிகர் நகுலின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.

  இலங்கையில் இரண்டு வாரங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பங்குச்சந்தை 13 சதவிகித வீழ்ச்சியை கண்டதால் வர்த்தகம் நிறுத்தப்பட்டது.

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணி போராடி தோல்வியடைந்தது.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Today news, Top News

  அடுத்த செய்தி